Header Ads



ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கா விமானங்களை சுட்டுவீழ்த்த உத்தரவிடுவேன் - இம்ரான்கான்


முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,,

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலை பகுதியில் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அடுத்து நான் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்த அனுமதிக்க மாட்டேன். 

மாறாக இதுபோன்ற தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்த பாகிஸ்தான் விமான படைக்கு உத்தரவிடுவேன். அமெரிக்காவின் இந்த தாக்குதல் பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது என ஆவேசமாக பேசினார். 

மேலும் அவர் பேசும் போது, வடக்கு வசிரிஸ்தானில் எனது கட்சி பேரணி நடத்த உள்ளது. அதன் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சம் எங்களுக்கு இல்லை. ஏனெனில் தலிபான்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம். 

எனவே பேரணி மிகவும் அமைதியான முறையில் நடைபெறும். அங்கு பேரணி நடத்துவதை பாகிஸ்தான் ராணுவமும் தடுத்து நிறுத்தாது என நம்புகிறோம் என்றார். 

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் தூதர் மேரி ஆன், இங்கிலாந்து பத்திரிகையாளர் லாரன் பூத் ஆகியோரும் கலந்து கொண்டனர். லாரன் பூத் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் தங்கை ஆவார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இஸ்லாதுக்கு மாறினார்.

3 comments:

  1. உங்கள் வெற்றிக்கு இறைவனை வேண்டுகின்றேன் இம்ரான் கான் அவர்களே..! முஹம்மது அலி ஜின்னாஹ் வின் பின்னர் முதுகெலும்புள்ள ஒரு தலைவன் பாக்கிஸ்தானுக்கு கிடைக்கட்டும்.... நீங்கள் பாக்கிஸ்தானை வழி நடாத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம்களைச்சுற்றி ஒரு பாதுகாப்பு இருப்பதாக உணர்வோம்...

    ReplyDelete
  2. இம்ரானுடைய வெற்றி அவரின் நாட்டுக்கு பாதுகாப்பாக இருக்கலாம்.ஆனால் நமக்கு அல்லாஹ்வின் பாதுகாப்புதான் வேண்டும்.இதெல்லாம் தேர்தல் விளையாட்டு வென்றபின் அமெரிக்க நிகழ்ச்சி நிரல் தான்.பாகிஸ்தானோ,அதன் நாட்டு தலைவர்களோ நமக்கு வழிகாட்டிகள் அல்ல.பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு தேவை என்றால் நீங்கள் அங்கு போய்தான்
    வாழ வேண்டும்.உங்களுடைய கருத்து பொருத்தமில்லாதது போல் இருக்கிறது.உலகத்திலே எந்த முஸ்லிமுக்கும்
    எது நடந்தாலும் ஒரு அறிக்கையுடன் எல்லாம் முடிந்து விடும்.60 க்கும் மேற்பட்ட நாடுகளிருந்தும் ஒவ்வொரு முஸ்லிமும் அனாதைதான்.உறுதியான ஈமானும்,அமல்களும் நம்மிடம் இல்லாதது நம் பலவீனம்.அதுவே நம் அழிவுகளுக்கும் காரணமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. பெரும்பாலான பாகிஸ்தானியர்களைப் பொறுத்தவரை, இம்ரான் கானின் கட்சி என்பது இலங்கையின் JVP போன்றது.

    அரசை விமர்சிப்பதற்கும், மக்களை விழிப்பூட்டவும் ஒரு நல்ல கட்சி.... ஆட்சி செய்வதற்கு எல்லாம் உதவாது என்பது அவர்களின் நிலைப்பாடு.

    ReplyDelete

Powered by Blogger.