Header Ads



ஒட்டிப்பிறந்த குழந்தைகள் - 9 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு



இந்தியா - ஐதராபாத்தில் தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகளுக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விமோசனம் கிடைத்துள்ளது. அவர்களை அறுவை சிகிச்சை மூலம் 2 ஆக பிரிக்க அமெரிக்க டாக்டர்கள் முன்வந்துள்ளனர்.

தலை ஒட்டிப் பிறந்த அந்த பெண் குழந்தையின் பெயர் வீனா- வாணி (9). ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என கருதப்படுகிறது. இதனால் இரு குழந்தைகளையும் அறுவை சிகிச்சை மூலம் இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு அதிகம் செலவாகும் என்பதாலும் இந்தியாவில் எந்த மருத்துவமனையிலும் அதற்கான வசதிகள் இல்லாததாலும் பிரிக்கும் முடிவு தள்ளிப்போனது.

வீனா, வாணியை பிரிக்க அறுவை சிகிச்சை செய்ய யாராவது முன்வந்தால் அதற்கான செலவு தொகையை அரசே வழங்கும் என்று அப்போது முதல்- மந்திரியாக இருந்த ராஜசேகர ரெட்டி அறிவித்தார். இந்த நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர்கள் கடந்த 2009-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்ய முன் வந்தனர். இருவரில் ஒருவரைத்தான் பிழைக்க வைக்க முடியும் என்று டாக்டர்கள் கூறியதால் குழந்தையின் பெற்றோர்கள் அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்கவில்லை.

இப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த பால்டிமோர் குழந்தைகள் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வீனா- வாணியை அறுவை சிகிச்சை செய்து தனித்தனியாக பிரிக்க முன் வந்துள்ளனர். நியூயார்க் ஆஸ்பத்திரியின் டாக்டர் டேவிட் ஸ்டீபன்பர்க் தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவ குழு ஐதராபாத் வந்து வீனா- வாணியை நேரில் பார்த்து பரிசோதனை செய்தனர்.

பின்னர் டாக்டர் டேவிட் ஸ்டீபன் பர்க் கூறியதாவது:-

வீனா-வாணிக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க முடியாது. அமெரிக்காவில்தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும். 4 கட்டமாக அறுவை சிகிச்சை நடத்த வேண்டும். இதற்காக ரூ. 6 கோடி செலவாகும். 17 முதல் 33 மருத்துவ நிபுணர்கள் இதில் பங்கேற்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பிறகு 2 குழந்தைகளும் நலமுடன் இருக்குமா? என்பதை இப்போது எங்களால் கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திர அரசு அனுமதி அளித்த பிறகு அறுவை சிகிச்சை எப்போது நடக்கும் என்பது தெரியவரும். 

No comments

Powered by Blogger.