Header Ads



ஈரான், அல்ஹைதா, தலிபான் - 35.000 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டுமாம்..!


"அமெரிக்காவில், நியூயார்க் இரட்டைக் கோபுர வர்த்தக மையம் உள்ளிட்ட இடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களுக்கு, ஈரான் மற்றும் அல்-குவைதா அமைப்பினர், 35 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்,'' என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்காவில், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, ராணுவத் தலைமையகமான பென்டகன், நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரம் உள்ளிட்ட இடங்கள் மீது விமானத்தை மோதச் செய்து, தாக்குதல் நடத்தப்பட்டது. அல்-குவைதாகள் இந்த தாக்குதலை நடத்தினர். இதில், 3,000 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில், ஈரான் தலைவர், அயதுல்லா காமெனி, லெபனான் நாட்டின் ஹெஸ்புல்லா , ஆப்கானிஸ்தானின் தலிபான் மற்றும் அல் -குவைதாகள் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. 

பலியானவர்களின் உறவினர்கள், 47 பேர், நஷ்டஈடு கோரி, அமெரிக்க கோர்ட்டில், கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். நியூயார்க் கோர்ட், இந்த வழக்கை, விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இவ்வழக்கில் தீர்ப்புக் கூறிய, நீதிபதி ஜார்ஜ் டேனியல், "2001ம் ஆண்டு நடந்த தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு நஷ்டஈடாக, 35 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, ஈரான் தலைவர் காமெனி மற்றும் அல்- குவைதா உள்ளிட்ட, அமைப்பினருக்கு உத்தரவிட்டார்.



2 comments:

  1. அமெரிக்காவினதும்,நேட்டோவினதும் வெறியாட்டத்திற்கு அழிந்து போன சொத்துகளுக்கும்,அழிந்த ,அழிக்கிற,அழியப் போகிற உயிர்களுக்கும் யாரிடம் நஷ்ட ஈடு கேட்பது.அதெல்லாம் ஈரானுடைய வெளி நாட்டு சொத்துகளை சுருட்டுவதட்கும்,தேர்தலில் வெல்லுவதட்கும் ஆடும் குறுக்கு புத்தி.

    ReplyDelete
  2. நட்டஈடிணை சியோனிசகாரர்களிடமே கேக்க வேண்டியதுதானே..

    9/11 is a Inside Job... இது முழுமையான அமெரிக்கா,சியோனிச திட்டமிட்ட தாக்குதலாகும்.... இது முழுமையாக நிருபிக்கப்பட்ட உண்மையாகும்.........
    ஏன் இன்னும் media இல் இப்படியாகவே சொல்கிறார்கள்....
    நம் முஸ்லிம்கள் கூட இன்னமும் இதை பின்லேடன் செய்ததாகவே சொல்கிறார்கள் (வெட்கமாக இருக்கிறது)..
    Youtube சென்று "9/11 truth" என்று டைப் சேது சர்ச் பண்ணுங்கள்....

    * இக் கட்டுரையில் கூட இந்த விடயத்தினை சேர்த்து சொல்லி இருக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.