Header Ads



அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ஹக்கீமையும், சம்பந்தனையும் சந்திக்கிறார்

உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோரைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

இவர்களுடனான சந்திப்பையடுத்து பிளேக், அரச தரப்பின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது ஸ்தம்பிதமடைந்துள்ள அரசியல் தீர்வுப் பயணம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பெறுபேறுகள் ஆகிய உட்பட மேலும் பல விடயங்கள் குறித்தும் அவர் பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன்,  சமகால பிரச்சினைகள் தொடர்பிலும் பிளேக்குக்கு கூட்டமைப்பு தெளிவுபடுத்தவுள்ளது. அடுத்ததாக, முஸ்லிம் காங்கிரஸுடனான சந்திப்பின் போது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் விவகாரம் தொடர்பில் பிளேக் முக்கிய கவனம் செலுத்துவார் என்பதுடன், முக்கிய சில விடயங்கள் தொடர்பில் அவர் மு.காவின் நிலைப்பாட்டையும் கேட்டறியவுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மு.கா. ஆகியவற்றுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து அரசுக்குத் தெளிவுபடுத்தவுள்ள பிளேக், இவ்வாறான விடயங்களுக்கு உடன் தீர்வு அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்துவார் என அறியமுடிகின்றது.
 

3 comments:

  1. கிழக்கு மாகாண சபைத் தேத்தல் என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். இது குறித்து அமெரிக்கா அக்கறை செலுத்துவதற்கு எதுவுமில்லை. இலங்கையின் உள் விவகாரங்களில் அமெரிக்கா அநாவசியமாகவும், அளவுக்கு அதிகமாகவும் மூக்கை நுளைக்கின்றது என்பது தெளிவு. இதனை மட்டுப் படுத்த வேண்டும்.

    பக்கத்தில் இருக்கும் இந்திய மத்திய அரசே நடப்பவற்றை பார்த்துக் கொண்டு நாகரீகமாக இருக்கும் பொழுது, அமெரிக்காவுக்கு ஏன் அவ்வளவு சொறிச்சல்?

    சம்மந்தனும், ரவூப் ஹக்கீமும் அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஒ பிளேக்கை சந்திப்பதை நிராகரிக்க வேண்டும்.
    குறைந்த பட்சம் ரவூப் ஹக்கீமாவது செய்வாரா?

    ReplyDelete
  2. இதில் பல மர்மங்கள் புதைந்திருக்கின்றது ஹகீம் என்ன என்னவோ வாக்குறுதிகளை யார் யாரிடம் கொடுத்து மாட்டிக்கொண்டு தமது கட்சியின் சகாக்களுக்கும் மறைத்துக்கொண்டு கிணறு வெட்ட பூதம் வெளிக்கிட்டது போல இந்த ராபர்ட் ஒ பிளேக் உளன் என்ன காலியான சம்பந்தம் சம்பந்தரிடம் விபத்தாக வாகுக் கொடுத்து மாட்டியுள்ளாரோ தெரியாது பாவி மனிதன் மகிந்தவுக்கும் ஏதாவது கயிறு கொடுத்து இருப்பார் அதேபோல யூ என் பி யுக்கும் மதத்தவர்களுக்கும் ஏதாவது வாக்குக் கொடுத்து இப்போ அமெரிக்கனுடன் மாட்டி பின்னர் சிங்களவனுடன் வாங்கிக் கட்டப் போறார்

    ReplyDelete
  3. லா வோ,

    ராவூஒ ஹக்கீம் இதே பிளேக்கிடம் கோத்தபாயாவைப்பற்றி கோள் மூட்டியவர். விக்கி லீக்சில் விலாவாரியாக வந்திச்சே கவனிக்கவில்லையா? அதாவது தமிழ் வர்த்தகர்களிடம் பனம் பறிச்சு அவங்களிடம் இனிமேல் இல்லாமல் போச்சு அல்லாது தமிழ் வர்த்தகர்கள் நாட்டை விட்டு போய்விட்டார்கள். இப்போ முஸ்லிம்களிடம் பறிக்கிறார்கள் எனச் சொன்னவர் ஹக்கீம் ! இந்த பறிப்பு நடக்கும் போது இவர்த்தான் நீதிஅமைச்சர் பாருங்க.... கப்சிப்பாக இருந்தார், அதுவும் ஒரு நீதி அமைச்சர். பின்னர் முஸ்லிம்களுக்கு வந்தபோது பெரிய சைத்தான் அமெரிக்காவிடம் போய் அழுதார்.
    அப்ப பெரிய சைத்தான் என்ன நினைச்சிருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க லா வோய்!
    நீங்க என்னடா எண்டால் குறஞ்சபட்சம்..கூடிய பட்சம் என ....

    ReplyDelete

Powered by Blogger.