களனி கங்கையில் மேலும் தங்க படிமங்கள் - அகழ்வில் ஈடுபட விரைவில் அனுமதி
களனி கங்கையின் மேலும் சில பகுதிகளில் தங்கப் படிமங்கள் இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கங்கையின் பூகொடை பிரதேசத்தின் மேல் பகுதிகளில் தங்கப் படிமங்கள் பெறக்கூடிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி என்.ஜீ.விஜயானந்த குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் தமது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளில் இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் அகழ்வு நடவடிக்கைகளுக்கான அனுமதியை வழங்க முடியாதெனவும் வானிலை வழமைக்குத் திரும்பியதும் குறித்த பகுதி மக்கள் அகழ்வில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் பணியகம் அறிவித்துள்ளது.

தங்கம் வேறு இடங்களில் கிடைக்காமல், பூகொடையின் குறித்த பகுதியில் கிடைத்ததற்கு முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ReplyDeleteமுஸ்லிம்கள் வாழும் பகுதியில் கிடைத்திருந்தால், மொத்த சுற்று வட்டாரக் காணிகளையும், எதோ ஒரு பெயரில் (புனித பூமி/ புதைபொருள் பூமி/ கனிம வளங்கள் படிமங்கள் உள்ள பூமி) அரசாங்கம் கையகப் படுத்தி, முஸ்லிம்களை வெளியேற்றி இருக்கும்.
இது ஒன்றே போதும் அமெரிக்க உள்ளே வருவதற்கு. la voix எழுதிய கருத்து உண்மையே..
ReplyDelete