அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் புதியவர்கள் இணைவு
கிழக்கு மகாகண சபை தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியினை உறுதிப்படுத்தும் வகையில் பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனின் முன்னிலையில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் புதிதாக இணைந்து வருகின்றனர்.
இரக்கக்கண்டி பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வின் போது குச்சவெளி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ உறுப்பினர் என்.சலாஹூதீன் ,தலைரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் பொறுப்பற்ற தீர்மானங்களால் முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதால்,தொடர்ந்தும் அக்கட்சியின் தலைமையில் இருப்பது சமூகத்திற்கு இழைக்கும் அநீதி என்பதால் தான் அகில இலங்கை இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டதாக உறுப்பினர் என்.ஸலாஹூதீன் தெரிவித்தார்.

It shows the Muslims in the eastern province are starting to see the real face of SLMC. A good sign for the future of Muslim community.
ReplyDeleteDear ikram, that salahudeen dont know the real face of Rizad and his party he can understand in future.
ReplyDelete