Header Ads



'நாங்கள் இவரை அறிந்து கொள்வோம்'

அவர் ஊடகப் பணியின் கருத்தை சரியாக புரிந்து கொண்ட ஊடகவியலாளராவார். இலக்கிணையுடைய ஊடகவியலாளராவார்.  அவருடைய மன உறுதித்தன்மை, புத்திசாதுரியமிகு தலைமைத்துவம் அதிர்ச்சியளிக்கின்றது.

உலகப் பிரபல்யமிகு போபஸ்  சஞ்சிகை 2009ம் ஆண்டு உலகின் பலம் வாய்ந்த நபர்களில் ஒருவராக அவரை தெரிவு செய்து அறிவித்திருந்தது. தொழில்சார் ஊடகவியலாளர் ஒருவர் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

உலகில் இருக்கும் வெளிநாட்டு கொள்கை தொடர்பாக விமர்சகர்கள் 100 பேரில் முதலாமிடத்தை வகிக்கக் கூடியவர் One of the most powerful people in the world  சர்வதேச விவகாரம் தொடர்பாக வெளிவரும் உலகின் பிரபல்யமான சஞ்சிகையான பொரின் பொலிசி மெகஸின் மூலம் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளர்.

வர்த்தக துறை தொடர்பாக வெளிவரும் உலகின் முதற்தர சஞ்சிகையான Fast Company என்ற சஞ்சிகை 2011 ம் ஆண்டில் வர்த்தக துறையின் உலகிலிருக்கும் மிகச் சிறந்த ஆக்கபூர்வமான ஆட்கள் 100 பேரில் முதலாமவராக At the first in the 100 most creative people in business - 2011 அவரைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த ஊடகவியலாளர் யார்?
 
நீங்கள் அவருடைய குரலுக்கு செவிசாய்க்க வேண்டுமா? நீங்கள் அவரது வாழ்க்கை சரிதையை வாசிக்க வேண்டுமா? எகிப்து மக்களின் சுதந்திரமான எழுச்சியின் போது அவருக்குக் கிடைத்த தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்ட செய்தி பின்வருமாறு,

''நான் இப்போது பேசுவது தஹ்ரீர் சதுக்கத்திலிருந்து தயவு செய்து  உங்களது கமராவை மூடி விட வேண்டாம். உங்களது கெமராவை நீங்கள் மூடி விட்டால் இங்கு படுகொலைகள் இடம்பெறலாம்.''

அவர் உடன் செயற்பட்டார். அவருடைய செய்தியாளர்களுக்கு எகிப்து தடை பிரதேசமாக விருந்தது. எனினும் அவருடைய புகைப்படப்பிடிப்பாளர்கள் ஒளித்திருந்து சென்று இந்த எழுச்சியை அறிக்கையிட்டனர். அவர் அவர்களுக்கும் தமது அலுவலகத்துக்கும் இந்த எழுச்சியை நேரடியாக காண்பிக்குமாறு பணிப்புரை வழங்கினார். அதன் மூலம் எகிப்து மக்கள் சுதந்திரத்துக்காக எழுப்பிய குரல் உலகெங்கும் கேட்டது. உலகெங்கும் பார்க்க முடிந்தது.  உலக மக்களது கண்முன்னே இடம்பெறும் இந்த சுதந்திரத்துக்கான எழுச்சி அந்த ஊடகக் கண்ணின் பாதுகாவலனாக இருந்தது.

எகிப்தின் ஏகாதிபத்திய ஆட்சியின் தடைக்கு  கீழ்ப்படிந்திருந்த ஊடகங்கள் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் குரல்களை மட்டுமே வெளிப்படுத்தினார்கள்.
'தவறாக வழிநடத்தப்படுகின்ற உங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துக் கொள்ளுங்கள'

எனினும் எகிப்தின் இளம் பிள்ளைகளது சுதந்திரத்துக்கான எழுச்சியை திசை திருப்புவதற்கு தயாராகவில்லை. எகிப்தின் மூத்த மக்கள் தமது பிள்ளைகளை அதைரியப்படுத்துவதற்கு பதிலாக சுதந்திரத்துக்காக அவர்களோடு ஒன்று சேர்ந்தனர். அவர்கள் தம் குரலில் வெளிப்படுத்தியது அகிம்சை வழியிலாகும். ஒழுக்க விழுமியங்களுடனாகும்.. வன்செயல் அற்ற முறையிலாகும்.

ஊடகங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்காக இந்த ஊடகவியலாளரை உள்ளடக்கிய குழுவினர் திரும்பி அந்த மக்களுக்கு நம்பிக்கையுடன் தமது பொறுப்பினை நிறைவேற்றினர். எகிப்து மக்களின் குரலினை உலக மக்களுக்கு காண்பித்தார்கள்.  கிடைத்த பிரதிபலன் ஏகாதிபத்திய ஆட்சியாளரான ஹோஸ்னி முபாரக் ராஜினாமா செய்து வெயியேறியதாகும். டியுனீசியாவின் பென் அலியும் இதே மாதிரி ராஜினாமா செய்து வெளியேறினார்.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரித்தானிய டெய்லி மிறர் பத்திரிகையில் இந்த ஊகடவியலாளர் பற்றி ஒரு செய்தி அறிக்கையிடப்பட்டிருந்தது. அது அவரது ஊடக அலுவலகத்துக்கு கொண்டு போய் போடப்பட வேண்டும் என அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஸ், பிரித்தானிய தலைவர் டோனி பிளேயர் சமர்ப்பித்திருந்த அறிக்கை தொடர்பாகவாகும். அதேபோன்று அவரது  காபுல் மற்றும் பக்தாத் அலுவலகங்களுக்கு குண்டு போடப்பட்டது.  ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். எனினும் அவருக்கு வாழும் பாக்கியம் கிடைத்தது.

மத்திய கிழக்குக்கு ஜனநாயகத்தை கொண்டு வரும் செயற்பாட்டின் மூலம்  ஜனநாயகத்தின் குரலுக்கு குண்டு போட்டதை நாம் கண்டோம். எனினும் அவரின் மனவுறுதி தளரவில்லை. அவரது செயற்பாட்டை நிறுத்தவுமில்லை.
'எனக்கு இப்போது 43 வயதாகிறது. எனது வாழ்நாளில் நான் அநேகமாக காண்பது  எமது பிராந்தியத்துக்குள் கண்டது அநேகமான ஏகாதிபத்திய ஆட்சியாளர்களையே. ஊழல் மிகு தலைவர்களையே. இந்த அரசியல் தலைவர்கள் ஊடகவியலாளர்களின் தலைவர்களல்லர். கடந்த பல வருடங்களாக இவர்கள், ஊடகவியலாளர்களின் தலைவர்களாக கருதப்பட்டதை நாம் கண்டோம். அது பிழையானது ஊடகவியலாளர்களான உமது உரிமை அதுவல்ல. எமது எஜமானர்கள் மக்களே. ஊடகங்கள் மக்களது குரலாக இருக்க வேண்டும். மத்திய கிழக்கு பிராந்தியத்துக்குள் நாம் அந்த பணியையோ செய்கின்றோம்:

இது அவரது குரலாகும். மக்களது குரல் மக்களின் ஊடகத்தினூடக வெளிவரும்போது பிராந்தியத்தில் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் நெறிப்படுத்தப்படும் ஊடகங்கள் அதற்கு இவ்வாறு பதிலளித்தார்கள் .

''அந்தக் குரல் அல் கைதாவின் குரலாகும். 
அந்தக் குரல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் குரலாகும்.
அந்தக் குரல் இஸ்ரேலிய சதிகாரர்களின் குரலாகும்''

அவரது ஊடகத்துக்குள் இஸ்ரேலிய அரசியல்வாதிகளுக்கும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளுக்கும் திரை விலக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அராபிய சமூகத்துக்குள் அவர்களுக்கு விமர்சனங்கள் கிடைத்தன. அதன் மூலம் அவர் ஒசாமா பில்லாடனுக்கும் அல் கைதா தலைவர்களுக்கு தமது திரையை திறந்து வைத்தார்.

தமது ஊடகத்தின் மூலம் பயங்கரவாதி, தீவிரவாதி என்ற லேபல்களை ஒட்டுவதற்கு செயற்படாத அவர் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்பதை தீர்மானிக்க வேண்டியது பார்வையாளர் மக்களே என்ற அடிப்படையில் தம் கடமையை நிறைவேற்றினார்.

பலம்வாய்ந்த மேற்கு ஊடகங்கள் பரந்த போக்கில் பார்ப்பது மற்றும் சகல தரப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பதன் காரணமாக குறுகிய காலத்துக்குள் பாரம்பரிய பலம் வாய்ந்த ஊடகங்களுக்கு அவரது ஊடகம் சவாலாக மாறியது.
பல்வேறு தரப்பினர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களுடைய இயக்கங்களின் பெயர், அதில் அவர்கள் வகிக்கும் பதவிகளை சமர்ப்பிப்பதற்கு  பதிலாக வேறு லேபல்களை ஒடடடி, அவர்கள் பற்றிய முன் தீர்மானங்களை எடுப்பதனால் மக்களை தவறாக வழிநடத்தாதிருக்க அவர் தனது ஊடகத்தின் மூலம் செயற்பட்டார்.

''நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடின் எங்கள் எதிரிகள் ஆவார்கள்.

ஜனாதிபதி புஸ்ஸின் இந்தக் கொள்கை மாற்றுக் கொள்கைகளுக்கு இடமளிக்க வேண்டுமென்ற புனிதமான ஊடக சித்தாந்தத்துக்கு முரண்பட்டது. புஸ்ஸின் இந்த சங்கற்பம் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தொடர்பான அமெரிக்க சம்பிரதாய உரிமைக்கு முரண்பட்டது.  இந்த சங்கற்பம் சுதந்திரத்தின் உரிமையை அடையாளப்படுத்துகின்ற அமெரிக்காவில் அமைக்கப்பட்டிருக்கின்ற ரோம சுதந்திரதேவி சிலையைக் கூட அகௌரவிப்பதாகும்.

மாற்றத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்து இதற்கிடையில் ஒபாமா ஜனாதிபதியானார். பிரபலமாக கெய்ரோ விரிவுரையில் அமெரிக்க வெளிவிவகார கொள்கையில் தெளிவான மாற்றத்தைக் காட்டி அவர் நட்புக் கரத்தை அரபுலகின் மீது நீட்டினார். நெகிழ்வுத் தன்மையை அடையாளப்படுத்தி நாம் பேசுகின்ற ஊடகவியலாளரையும் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்காவின் ஊடகத்துறையின் புத்திஜீவிகள் குழுவாக கருதப்படும் மத்திய கிழக்கு நிறுவகம் புதிய அமெரிக்கன் பௌண்டேஷன் வெளிவிவகார தொடர்பு கவுன்ஸில் உட்பட ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகம் உட்பட  அமெரிக்க சமூகத்தினர் மத்தியில் உரையாற்றும் அவருக்கு பல்வேறு கேந்திர நிலையங்களில் வாய்ப்பு கிடைத்தது.

''மத்திய கிழக்கில்  இன்று ஏற்பட்டிருக்கும் வரை படத்தின் எல்லைகளை பிரித்தது  100 வருடங்களுக்கு முன்பாகும்.  அதன் வடிவத்தை தீர்மானித்தது அதன் உரிமையாளர்களான மக்களது கருத்துக்களை பெற்றல்ல, அத்தீர்மானம் எடுக்கப்பட்டது ஏகாதிபத்தியவாதிகளால் கதவுகளை மூடிக்கொண்டு எடுக்கப்பட்ட ரகசிய தீர்மானங்களால்.'

இந்த புதிய வரைபடத்துக்குள் பகிரங்கத்தன்மைக்கு வாய்ப்பு இருக்கவில்லை. கலந்துரையாடலுக்கும் வாய்ப்பிருக்கவில்லை, ஊடக சுதந்திரத்துக்கு வாய்ப்பிருக்கவில்லை. ஜனநாயக மாற்றத்துக்காக எழுப்பப்படும் குரலை வெளிப்படுத்தக்கூடிய வழி இருக்கவில்லை. மேற்கின் சக்திவாய்ந்த ஊடக ஆதிபத்தியத்தின் வரையறைக்கப்பால் எல்லைக்கப்பால் பார்க்கக்கூடிய வாய்ப்பு இருக்கவில்லை. ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கும் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்குமிடையேயான புரிந்துணர்வு அதற்கு இடமளிக்கவில்லை'

இது அவருடைய குரலாகும். ஈராக், எகிப்து, டியுனீசியா போன்று யெமனிலும் அவருடைய ஊடக அலுவலகங்கள் ஏகாதிபத்திய சக்தியினால் மூடப்பட்டிருந்தன. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். சிலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள். அலுவலகங்களுக்கு குண்டுகள் போடப்பட்டன. ஏகாதிபத்திய மனோபாவம் ஆட்சி புரியும் எல்லா இடங்களிலும் இந்த நிகழ்வுகளை காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்க சமூகத்துக்குக்கூட அவர்களின் ஊடகங்களை காண்பதற்கு வாய்ப்பளிக்காது கதவுகள் மூடப்பட்டிருந்தன.

இந்த சவாலை ஊடகத்தில் மத்திய கிழக்கில் சுதந்திரத்தை இழந்திருந்த மக்களுக்காக தமது கருத்துக்களை வெளியே கொடுக்க முடியாததன் காரணமாக மக்களுக்காக, பாதிக்கப்பட்டவர்களுக்காக  உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய வண்ணம் மனவுறுதியை கைவிடாது புனிதமாக நோக்கிய ஊடகப்பணியில் ஈடுபட்ட ராட்சத சக்திமிகு இந்த ஊடகவியலாளர் யார்?

நாங்கள் அவரை அறிந்து கொள்வோம்.  அவர் பெயர்  வடாஹ்கன்பார்  2003ம் ஆண்டிலிருந்து 2011 செப்டெம்பர் 20 வரை அல் ஜஸீராவுக்கு தலைமைத்துவம் வழங்கியவர் அவரே.
 
 

- குமரன் -

No comments

Powered by Blogger.