'பெருநாள் தினத்தன்று பள்ளியினுள் களேபரம்' தௌஹீத் - தப்லீக் முறுகல்
நான் வழமையாக சப்பாத்துகளைக் கழற்றிவிட்டே பள்ளிவாசலினுள் செல்வேன். அனைத்து மத நிலையங்களுக்கும் புனித ஸ்தலங்களுக்கும் செல்லும் போது நாம் சப்பாத்துகளைக் கழற்றி விடுவோம். இன்று அதற்குக் கூட அவகாசம் கிடைக்கவில்லை. அந்த அளவிற்குப் பள்ளியில் நிலைமை மோசமாக இருந்தது. இதற்காக நான் வெட்கப்படுகிறேன். இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம். நோன்புப் பெருநாள் வேண்டுகோளாக இதை விடுக்கிறேன்.
இவ்வாறு இறக்குவாணை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் மஸிம்புல பள்ளிவாசலினுள் நோன்புப் பெருநாளன்று கலவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு பிரிவினருக்கு அறிவுரை வழங்கினார்.
உதவி பொலிஸ் பரிசோதகர் பள்ளிவாசலினுள் அசம்பாவிதங்கள் எதும் ஏற்படாது நிலைமையை சுமுக நிலைக்குக் கொண்டு வந்து அனைவரையும் பள்ளிவாசலுக்குள்ளிருந்து வெளியே வரச் செய்து அறிவுரை வழங்கினார். ஒற்றுமைக்கு முஸ்லிம்கள் முன்மாதிரியானவர்கள். ஒற்றுமைக்கு உதாரணமாக நாங்கள் அவர்களையே எடுத்துக் கொள்வோம். நீங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் பார்ப்பவர்கள் முஸ்லிம்களைப் பற்றி கேவலமாக நினைப்பதோடு சிரிக்கவும் செவார்கள். நிர்வாக சபையைத் தவிர அனைவரும் அமைதியாக வீடுகளுக்கு செல்லுங்கள் என்றார்.
இறக்குவாணை முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்புப்பெருநாள் தொழுகைக்காகச் சென்றவர்கள் பெரும் வேதனையுடன் திரும்பிச் சென்றார்கள். பெருநாள் தினத்தன்று இமாம் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்தையடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உலகில் பலவிதமான கொள்கைவாதிகள் இருக்கிறார்கள். மக்கள் தமக்குப் பொருத்தமான அல்லது விருப்பமான முறைப்படி அமல்களைச் சரியாகச் செய வேண்டும். வேற்றுமையின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும். தவ்ஹீது தப்லீக் வாதிகள் என்று வேறுபட்டுக் கொள்ள வேண்டாம். எனது பயான் எந்தப் பிரிவினரையும் ஆதரிப்பதாக அமையாது. நடுநிலையானதாகவே இருக்கும். நான் ஒரு பிரிவினருக்கு சார்பாக பயான் நிகழ்த்துவதில்லை என்று இமாம் பெருநாள் பயானில் தெரிவித்தார்.
பயான் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒருவர் எழும்பி இமாமை விமர்சித்தார். குப்தா பிரசாரங்கள் முடிவுற்றதும் பள்ளியில் குழுமியிருந்த இரு பிரிவினருக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இரு பிரிவினரையும் சமாதானப்படுத்த சிலர் ஒரு மணித்தியாலமாக மேற்கொண்ட முயற்சிகள் சாத்தியப்படவில்லை.
இதனையடுத்தே நிலைமையைச் சமாளிப்பதற்காக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பள்ளிவாசலுக்குள் நுழைந்து நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை பொலிஸாருக்கு ஏற்பட்டது. குறிப்பிட்ட பள்ளிவாசலில் இதற்கு முன்பும் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்று பொலிஸாரின் தலையீட்டின் பின்பு தீர்வு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். பிரச்சினைக்கு காரணமானவர்களை பொலிஸார் எச்சரிக்கை செதுமுள்ளனர்.
முன்னைய சந்தர்ப்பங்களில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையினால் வெளியிடப்பட்டுள்ள பிரகடனம் பள்ளிவாசல் நிர்வாக சபை உட்பட சம்பந்தப்பட்ட இரு பிரிவினர் முன்னிலையில் வாசிக்கப்பட்டுமுள்ளது. பிரகடனத்துக்கிணங்க இரு பிரிவினரும் அமல்கள் செயும் போது பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாமென பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடையதான மற்றுமோர் சம்பவம் இரண்டு தினங்கள் கடந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி சுபஹ் தொழுகையின் போது இடம்பெற்றுள்ளது. அன்று பள்ளிவாசல் கதீப் இல்லாத காரணத்தினால் தொழுவிப்பதற்கு தற்காலிகமாக ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் சமூகமளிக்காத காரணத்தினால் முன்னாள் பரிபாலன சபைத் தலைவரின் மகனை நிர்வாக சபை தொழுவிப்பதற்கு நியமித்திருந்தது. அவர் தொழுவிப்பதை விரும்பாத ஒருவர் அவர் தொழுவிக்க முற்பட்ட போது அவரை தொழுவிக்க வேண்டாமெனத் தடுத்து விட்டார். பின் அவரது தகப்பனாரான முன்னாள் தலைவர் தொழுவிக்க முற்பட்ட போது அவரையும் கீழே தள்ளி விட்டார். இச்சம்பவம் பிரச்சினையை உருவாக்கி விடாதவாறு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தலையிட்டு சமாதானப்படுத்தினார்.
அன்றைய தினம் ஜும்ஆ பள்ளிவாசலில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செயப்பட்டது. இறக்குவாணையிலுள்ள சகல பள்ளிவாசல்களும் ஒலிபெருக்கி மூலம் இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. கூட்டத்திக்கு ஒரு பிரிவினர் சமூகமளிக்கவில்லை.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* இறக்குவாணையிலுள்ள சகல மஹல்லா பள்ளிவாசல்களிலும் ஷாபிஈ மதப்படியே அமல்கள் நடத்தப்பட வேண்டும்.
* தப்லீக் தவிர்ந்த எந்தவொரு இயக்கமும் எப்பள்ளியிலும் செல்வாக்கு செலுத்த முடியாது.
*தவ்ஹீத் கொள்கையுடையோர் தொழுகைக்கு வருவது தடை செயப்படக் கூடாது.
* தவ்ஹீத் தொடர்பான பயான்கள் எந்தவொரு பள்ளிவாசலிலும் நடத்தப்படக் கூடாது. அப்பிரிவினர் பயான்களை வீடுகளில் நடத்துவதற்கு ஆட்சேபனை இல்லை.
* ஜும்ஆ பயானுக்கான தலைப்பு வியாழக்கிழமையே கொடுக்கப்பட்டு அதன்படியே பயான் நடாத்தப்பட வேண்டும். மீறினால் கதீப் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஜும்ஆ பள்ளிவாசல் சகலருக்கும் சோந்தமானது.
* நிர்வாக சபை சகல மஹல்லாக்களையும் சேர்த்தே அமைக்கப்பட வேண்டும் என்பனவாகும்.
குறிப்பிட்ட பள்ளிவாசலில் பல வருடங்களாக இடம்பெற்று வரும் மதப் பிரிவுகளுக்கிடையிலான விரிசல்கள் தற்போது பள்ளிவாசலில் தொழுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறக்குவாணையை சேர்ந்த நலன் விரும்பிகள் இப்பிரதேசத்தில் நிலவிக் கொண்டிருக்கும் மதப்பிரிவுகளுக்கிடையிலான முறுகல் நிலைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் நலன் விரும்பிகள் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் இப்பிரச்சினையில் தலையிட்டு நிலைமையை சீராக்குமாறு கடந்த வாரம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை விரைவில் இரத்தினபுரி ஜம்இயத்துல் உலமா சபை பிரதி நிதிகள் இறக்குவாணை பிரதேச தவ்ஹீத், தப்லீக் கொள்கைவாதிகள் மற்றும் புத்திஜீவிகளுக்கான கலந்துரையாடலை விரைவில் நடத்தவுள்ளது.
இதேவேளை அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை தேசிய ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமாக மாநாடொன்றை விரைவில் இணைப்பாளர் அஷ்ஷெய்க் அகார் மொஹமட் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

முட்டாள்களின் தீர்மானங்கள்
ReplyDelete.அறியாமையின்,ரவுடித்தனத்தின்,திமிர்த்தனத்தின் போலிகளின் உச்சக் கட்டம்.தவ்ஹீத்வாதிகளே நீங்கள் சத்தியத்தின் பக்கம் இருப்பது உண்மையாக இருந்தால்,நீங்கள் தான் அல்லாஹ்விடம் தவக்கல் வைத்து பொறுமையாக இருந்திருக்க வேண்டும்.சத்தியம் தெளிவாக தெரியும் போது அசத்தியவாதிகள் கிலி
கொள்வதில் வியப்பேதும்மில்லை.
மதுஹபுகளே இல்லைஎன்று இருக்கும்போது,ஏன் அல்லாஹ்வும்,ரசூலும் காட்டித்தராத வழிமுறைகளை குருட்டுத்தனாமாக பின்பற்றவேண்டும் சிந்திக்க மாட்டீர்களா?தண்ணீருக்கு கலால் சேர்டுபிகட் கொடுப்பதுதான்
இஸ்லாம் என்று கூறும் நல் உலமாக்கள் நிறைந்த நாட்டில் சத்தியத்திற்கு எங்கே இடம் கிடைக்கப் போகிறது
முஸ்லிம்களை கருவறுக்க ஒரு சிலதுகள் பேயாக அலைகிறது.ஒருத்தரை ஒருத்தர் போய் காட்டிக்கொடுத்தீர்கள்
என்றால் ,அவர்களுக்கும் வேலை சுலபமாக இருக்கும்.மாற்று மத போலிஸ்காரர் மத்தியஸ்தம் பிடிக்கும் அளவிற்கு
தரம் தாழ்ந்த சமுதாயமாக பல்லின மக்களின் முன் தலை குனிந்து நிற்க வைத்து விட்டீர்களே.
அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்
அல்லாஹ்வையும் அவன் தூதரையும் தைரியமாக இரண்டாம் நிலைக்கு கொண்டு செல்லும் சமூகம். சகோதரர் Abu meraan அவர்களே சிந்திக்கும் மக்களாக இவர்கள் இருப்பார்கள் என்றால் ஏன் அல்லாஹ் நமக்கு இந்த நாட்டில் தந்திருந்த கௌரவத்தை எடுத்தான்? கொஞ்ச நேரத்து முன் தான் கொழும்பு தெமடகோட வீதியில் இளம் முஸ்லிம் வாலிபர், ஒரு 20 , 22 வயதிருக்கும்; நான் அதிகம் என் bike ஐ ஓரமாக்கியத்தில் சங்கடப் பட்டதால் sorry சொன்னேன். அவரும் sorry சொன்னார். சொன்ன விதத்தில் தெரிந்தது அவர் வேறு உலகத்தில் (drunk ) உள்ளார் என்று. அப்படியே தள்ளாடித், தள்ளாடிப் போனார். அப்படியே வாயடைக்கப் பார்த்து நின்றேன். இதற்கேல்லாம் யார் பதில் சொல்வார்? அவர்களும் திருத்த மாட்டார்கள், திருத்துபவனை திருத்தவும் விட மாட்டார்கள். இவர்கள் செய்வதெல்லாம் quran ஐ விட்டும் அல்லாஹ்வின்தூதரை விட்டும் மக்களை தூரமாக்கியதுதான். ஏனைய மதங்களைப் போல சடங்கு ரீதியான மதமாக மக்களை பழக்கி விட்டார்கள். அல்லாஹ்வின் மத்ஹபு எதுவென்று இவர்களுக்கு கவலையும் இல்லை, தேவையும் இல்லை. இவங்கள்ல அக்கறைல இதச் சொன்னா நமக்கு ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த lable ஐ அடித்து மக்களை ஹக்கை கேட்க விடாமல் செய்து விடுவார்கள். மக்களாவது சிந்திப்பார்கள் என்றால். They are busy with cinema, drama, Songs - Music..... அல்லாஹ் தான் நல்ல அறிவை நமக்கும் நமது சமூகத்துக்கும் தர வேண்டும்...iyyaaka nahbudh wa iyyaaka nasthaeen - ihdhinas siraathal musthkheem.
ReplyDeleteகூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ,,,,,, இதிலுள்ள முதல் மூன்று தீர்மானங்களும் இருக்கும் வரை முஸ்லிம் அல்லாதவர்களிடம் நியாயம் தேடி செல்வதில் எந்த அனியாயமும் இல்லை.
ReplyDeleteபொதுமக்களுக்கும் தவ்ஹீத் வாதிகளுக்கும் இடையில் நடந்த பிரச்சினையை தப்ளிக் என்று குறை கூறுகிறார்கள். உங்கள் பிடிவாதங்களை, கருத்து வேற்றுமைகளை வீட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள். நாங்கள் ஊருக்குள் ஒற்றுமையாக தன இருந்தோம். எப்ப இந்த கொள்கைவாதிகள் வந்தார்களோ அன்று முதல் இன்று வரைக்கும் பிரச்சினை தான்.
ReplyDeleteAbu Amna
முதலில் சஹோதரர் Abu Meeran கண்ணியமான உலமாக்களை குறை கூறாமல் ஹலால் பற்றி படிக்கவும்.
தன்னிரெய் சுத்த படுத்த Active Carbon பயன் படுத்துவார்கள். இந்த கார்பன் 2 வழியில் எடுப்பார்கள்.
முதலாவது எலும்புகள் (மனித, மிருக) , அடுத்தது மரங்கள் மூலமாக. இந்த கார்பன் வைத்து தான் Water Purification நடக்கும்.
If you got time please join Halal Awareness Program.
கருத்து வேற்றுமைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம். கருத்து முரண்பாடுகள் ஏற்படும் போது அதனை தனது அதிகாரத்தால், அடக்கு முறையால், அடாவடித்தனத்தால், கீழ்த்தரமான சொற்பிரயோகங்களினால் எதிர் கொள்ள நினைப்பது வடிகட்டிய அறியாமையாகும். இங்கு அவ்வாறு தான் நடந்து இருக்கிறது. ஒரு கருத்து முரண்பாடு ஒரு இடத்தில் ஏற்ப்படும் போது அதற்கான சரியான தீர்வு பிரச்சினைக்குரிய இரு தரப்பினரும் ஒரு இடத்தில் அமர்ந்து பிரச்சினைக்கான தீர்வை அழகிய முறையில் அறிவுபூர்வமாக கலந்து ஆலோசிப்பதுதான். மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றால் குர் ஆன் ஹதீஸை நீதிபதியாக வைத்து அவை என்ன சொல்கிறதோ அதற்கு இரு தரப்பினரும் கட்டுப்பட வேண்டும். இல்லை உலக நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயம் என்றால் ஒரு அமீர் நிறுத்தப்பட்டு அவர் இரு தரப்பு வாத பிரதிவாதங்களை அலசி ஆராய்ந்து ஒரு முடிவை சொல்வார் அதற்கு கட்டுப்படவேண்டும். இந்த அணுகுமுறைகளை கைகொள்லாததின் பிரதிபலிப்பே மேற்கூரப்பட்ட்ட சம்பவம்.
ReplyDeleteகுறிப்பு : தப்லீக் தவ்ஹீத் பிரச்சினையை பொறுத்தவரையில் யார் பிரச்சினை படுத்துகிராகள் என்பது முக்கியம். எந்த இயக்கமாக இருந்தாலும் அவற்றுக்கு தமது பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கு தனி சுதந்திரம் கொடுக்க வேண்டும். அச் சுதந்திரத்தை ஒரு பிரிவு பறிக்கும் என்றிருந்தால் பரிப்பவர்கல்தான் பிரச்சினைக்குரியவர்கள். மக்கள் மத்தியில் அனைத்து இயக்கங்களின் கருத்துக்களும் போய் சேர்ந்தால்தான் அவர்கள் தமக்குரிய அறிவை பயன்படுத்தி ஒப்பிட்டு ஆராய்து ஒரு முடிவை எடுப்பதற்கு வாய்ப்பாக அமையும். ஆனால் பரவலாக அதிகமான ஊர்களில் தவ்ஹீத் பிரச்சாரம் தப்லீகின் அதிகார பலத்தினால்தான் அடக்கி ஒடுக்கப்படும் காட்சியைத்தான் அன்றாடம் பார்க்கிறோம். இதை தவிர்த்து கருத்து முரண்பாடுகளை அழகிய கருத்துக்களால் களைய முற்படுவதுதான் பிரச்சினைக்கான அழகிய தீர்வாக அமையும்.
மஸ்ஜிதில் இமாம் பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருந்த பொழுது, எழும்பி கூச்சல் போட்டு, குழப்பத்தை ஆரம்பித்து வைத்த நாஜுன் நிஸார் அவர்கள் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதே போல தப்லீக் ஜமாத்தினர்தான் பிரச்சினையை உருவாக்கினார்கள் என்பதும் இறக்குவானை மக்கள் அறிவார்கள்.
ReplyDeleteMohamed Siyam அவர்களே, முழுப் பூசணிக்காயை ஒரு பீங்கான் சோற்றில் மறைக்கும் முயற்சியா?