இரண்டரை வருடத்தின்பின் அமைச்சுப் பதவிதர ஹக்கீம் உறுதியளிப்பு - ஆர்.எம்.அன்வர்
எம்.எஸ்.எம்.நியாஸ்
முதல் இரண்டரை வருடங்களுக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதற்காக எனக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு செல்லப் போவதில்லை என்று திருகோணமலை மாவட்டத்தில் மு.கா. கட்சியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் ஜனாதிபதி செயலகத்தில் தனது சத்தியப்பிரமாணத்த முடித்துக்கொண்டு தனது ஊருக்கு வந்தத வேளை அவரைக் காணவந்திருந்த மக்களை அவரது அலுவலகத்தில் 2012-09-29 மாலை சந்தித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
ஏனைய மாவட்டங்களைப்போல் அல்லாது திருகோணமலையில் மும்முனைப்போட்டிக்கு மத்தியில் எமது கட்சிக்கு இரண்டு ஆசனங்களை கிடைக்கப்பெற செய்து எனக்கு அதிகூடிய விருப்பு வாக்குகளை 10,904 தந்த எனது பேரன்புமிக்க மக்களுக்கு என்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அதேநேரம், மு.கா.விற்கு வாக்களித்து என்னை வெற்றியடைய செய்த பின்னர் எமது பிரதேச கடத்தொளில் முடக்கப்பட்டிருகின்ன்றது. இது விடயம் தொடர்பாக அரசியல் உயர் மட்டங்களுக்கு கொண்ண்டு சென்று சாதகமான நிலைமைக்கு கொண்டு வந்துள்ளேன்.
திருகோணமலை மாவட்ட பூராகவும் இருந்து மக்கள் என்னை அங்கீகரித்து வாக்களித்துள்ளார்கள். இவர்களது எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக நான் எந்த தவறான நடவடிக்கைகளிலும் எந்த வற்புறுத்தலின் பேரிலும் ஈடுபடப்போவதில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி நமது பெண்கள் துஆ செய்து பாரிய போராட்டத்துக்கு மத்தியில் உருவான கட்சி. இந்த கட்சியை சீரழிக்க நான் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. அதற்கு துணை நிற்கவும் மாட்டேன்.
கடந்த மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது என முடிவு செய்ததன் பின்னர் கட்சி தனது பேரம் பேசும் சக்தியைக்கொண்டு அரசுடன் பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடாத்தியது. இதன் பயனாக அரசாங்கத்தின் சார்பாக தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக நமது கட்சிக்கு இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. இந்த அமைச்சுப்பதவிகளை யார் யாருக்கு பகிர்ந்து கொள்வது என்ற விடயத்தில் விசேடமாக தலைவரிடத்தில் ஒருமித்த கருத்து இருந்தது. ஆனால் கட்சிக்குள் பாரிய முரண்பாட்டை தீர்க்கும் பொருட்டு அப்பதவி எனது கையை விட்டுச்சென்றது. இருப்பினும் பின் இரண்டரை வருடங்களுக்கு தருவதாக தலைமைத்துவத்தினால் உறுதி வழங்கப்பட்டிருக்கின்றது.
கடந்த காலம்களில் எதிர் ஆசனத்தில் இருந்து கொண்டே நமது சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட வேலைகளை செய்துள்ளேன், இனியும் செய்வேன். என்னிடம் அமைச்சர் என்ற முத்திரை இல்லையே தவிர மற்றப்படி எல்லோரிடமும் சென்று இந்த மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுப்பேன். முதலமைச்சரும் ஆளுனரும் எனக்கு உத்தரவாதங்களை வழங்கி உள்ளார்கள். எனது அலுவலகம் வழமையை விட துடிப்புடன் இயங்கும் உங்களது தேவைகளை இங்கு நிறைவேற்றிக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment