Header Ads



பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் அமைச்சரவையில் பேசாததற்கு நியாயமான காரணம் உண்டு

 
நவமணி
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் தர்மத்தை மீறி இனவாதப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அலகப் பெரும்  கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மகா நாட்டில் கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் இனவாதப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாக தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து நவமணி வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் பொறுப்புடன் நடந்து கொள்கின்றது என்று தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் புதனன்று அமைச்சர் அலகப் பெருமவை அமைச்சரவைக் கூட்டத்தின்போது சந்தித்து இருவரும் ஒரே லிப்டிலே கிழே வந்தோம். இது பற்றி அவர் எதுவுமே என்னிடம் கேட்கவில்லை.

இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரசிற்கு வெற்றி வாப்பு அதிகரித்துள்ள நிலையில் அதன் வெற்றி வாப்பினைத் தடுப்பதற்காக பலரும் பலதையும் கூறுகிறார்கள். இவை குறித்து நாம் அலட்டிகொள்ளவில்லை.
 
ஜனாதிபதிக்கும் எமக்குமிடையிலான அரசியல் உறவு சிநேகமாகவே உள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திலும் அவரைச் சந்தித்தும் பேசினேன். கடந்த திங்களன்று நாம் இருவரும் ஒன்றாகக் காலை ஆகாரம் எடுத்தோம்.
 
தேர்தல் கள நிலமை பற்றித் தெரிவித்த அமைச்சர், திகாமடுல்ல மாவட்டத்தில் ஆறு பிரதிநிதிகளையும் மட்டக்களப்பு திருமலை மாவட்டங்களில் தலா மூன்று பிரதிநிதிகளையும் வென்றெடுக்கும் இலக்கில் சென்று கொண்டிருக்கின்றோம். திகாமடுல்லை மாலட்டத்தை நாமே வென்றெடுப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தான் பேசாததற்கு நியாயமான காரணங்களிருக்கின்றன. பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் பேசியிருக்கின்றேன். அவரும் என்னிடம் பேசியிருக்கின்றார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பள்ளிவாசல் தொடர்பாக அமைச்சரவையில் பேசவில்லை என்ற குற்றஞ்சாட்டு எழுப்பப்பட்டிருப்பது குறித்து கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

5 comments:

  1. Dear Hakeem,
    Please disclose the so called reasons?????

    ReplyDelete
  2. நியாயமான காரணம் என்ன‍? உங்களது அமைச்சுப் பதவி பறிக்க‍ப்ப‍ட்டு விடும் என்பதுதானே? அல்ல‍து வேறு ஏதாவதா?

    ReplyDelete
  3. Yes you are correct Mr. Safeer Hafis.

    ReplyDelete
  4. ஏனுங்க இவ்வளவு நாளும் வாய் திறக்காம இருந்துவிட்டு இப்ப நியாயமான காரணம் என்டு பூசி மழுப்பலா எத்தனை காலந்தான் ஏமாற்றுவீர் இந்த மக்களை அப்பாவி ஆதரவாளர்களை????

    ReplyDelete
  5. ஏன்டா திரும்ப திரும்ப அரசியல் வியாபாரிகள் என நிருபிக்கிறீர்கள்.தேர்தலில் வென்று எதை சாதிக்கப்போகிறீர்கள்.
    பக்ஸ குடும்பம் என்ன சொல்கிறதோ அதற்கு ஆமாம் சாமி என்று தலையாட்டுவதற்காக எவ்வளவு பொய், பித்தலாட்டம்
    தேவையா இந்த நாறிப்போன பொழைப்பு

    ReplyDelete

Powered by Blogger.