Header Ads



இலங்கையில் தமிழ்நாட்டுத் தமிழர்கனை வெளியேற்ற முடிவு செய்தால்..!

தமிழ்நாட்டில் இலங்கைப் பயணிகள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று இந்தியப் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் வி.நாராயணசாமி கூறினார். இந்த சம்பவம் குறித்துத் bbc க்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் நாராயணசாமி, சில தமிழகக் கட்சிகள் இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்தே அரசியல் நடத்துகின்றன. இது வருந்தத் தக்கது என்றார்.
 
தமிழக அரசு, இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த கால்பந்து அணியை வெளியேற்றி, அதன் தொடர்பாக ஒரு அதிகாரியை இடை நீக்கம் செய்ததும் வருந்தத் தக்க விடயம்தான் என்றார் அவர்.
 
இலங்கையில் தமிழகத்தை சேர்ந்த பலர் தொழில் செய்கின்றார்கள், கொழும்பில் பல தமிழ்நாட்டுத் தமிழர்கள் வணிக நிறுவனங்களை நடத்துகிறார்கள். இவர்களையெல்லாம், இலங்கை அரசு வெளியேற்ற முடிவு செய்தால் அதை தமிழக அரசு எப்படிப் பார்க்கும் என்று கேட்டார் நாராயணசாமி.
 
அப்படியென்றால் தமிழக அரசை இந்திய அரசு ஏன் தட்டிக்கேட்கவில்லை என்று கேட்டதற்கு, " இந்தப் பிரச்சினை ஏற்பட்டு ஒரிரு நாட்கள்தான் ஆகின்றன. அரசாங்கத்தின் மீது இருக்கின்ற பிரச்சினைகளுக்காக, சாதாரண பொதுமக்களை துன்புறுத்துவது சரியல்ல. இந்த பிரச்சினை தொடர்பாக, மத்திய அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்" என்றார் நாராயணசாமி.
 
தமிழக அரசு இந்த இலங்கைப் பிரச்சினையில் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு கவனிக்காமல் , கிடப்பில் போட்டதன் விளைவுதான் இது போன்ற சம்பவங்கள் என்ற கருத்து குறித்து பதிலளித்த நாராயணசாமி, மத்திய அரசு இது போன்று குறுகிய கண்ணோட்டத்தோடு நடந்துகொள்ள முடியாது, இதே அதிமுக அரசு, முன்பு, பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டது, இப்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் நடக்கின்ற ஒரு சம்பவத்தால், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள உறவு நட்பு பாதிக்கக்கூடாது என்றார்.
 
இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் நாராயணசாமி, இந்தியா போருக்குப் பின்னர், தமிழர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சுமார் 2,500 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டும் திட்டத்தை இந்தியா அமல்படுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்தியா , இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவேண்டும் என்பதையும் வலியுறுத்திவருகிறது என்றார் அவர்.
 
இலங்கையின் ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சி அளிப்பதற்கு தமிழ் நாட்டில் எழுந்த எதிர்ப்பை அடுத்து, மத்திய அரசு, அவர்களை திரும்ப அனுப்புவது குறித்து பரீசிலித்து வருகிறது. இந்த பயிற்சி தென்னாசிய நாடுகள் கூட்டமைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்டுவருகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

1 comment:

  1. பௌத்த இன வெறியர்களே உங்கள் வீரத்தை இலங்கையில் இருக்கும் இந்தியர்கள் மீது காட்டுங்கள்.முழுக்க முழுக்க
    புலிப் பினாமிகள் தான் இந்திய வியாபரத்தை செய்கிறார்கள்.நாங்கள்தான் உங்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறோம்.
    உண்மையான நாட்டுப் பற்று சிங்களவர்களுக்கு இருக்குமானால் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்தையும்
    தடுத்து ஸ்ரீ லங்கா யாருக்கும் காலனித்துவ அடிமை நாடு இல்லை என்பதை நிருபித்துக் காட்டுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.