பிரசார இறுதி நாளன்று அம்பாறையிலும், திருகோணமலையிலும் ஹக்கீம் (படங்கள் இணைப்பு)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தேர்தல் பிரச்சாரங்களுக்கான இறுதி நாளான புதன்கிழமை (05) காலையில் அம்பாரை மாவட்டத்தில் இறக்காமத்திற்கு அண்மையில் உள்ள குடுவில், மாணிக்கமடு ஆகிய கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார். முன்னாள் பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் மதீனா புரம் மலை வாசஸ்தலத்திற்கும் அவர் சென்றார். அமைச்சருடன் இறக்காமம் பிரதேச சபை தலைவர் நைசர், உப தலைவர் ஜாபிர் மௌலவி ஆகியோரும் இப் பயணத்தில் இணைந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் ஹக்கீம் திருகோணமலை மாவட்டம், மூதூரில் நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்குச் சென்றார். மாலையில் சம்மாந்துறை உட்பட அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை தேர்தலுக்கான இறுதி பிரசார கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வார்.




Post a Comment