லண்டன் பரா ஒலிம்பிக் - இலங்கைக்கு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு..!
2012 இலண்டன் பராலிம்பிக் விளையாட்டுத் தொடரின் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரரான பிரதீப் சஞ்சய தகுதி பெற்றுள்ளார். இந்த இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 1.20 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
பராலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியின் ஆரம்பச் சுற்றின் இரண்டாம் கட்டத்திற்கு ஆறி நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆறு வீரர்கள் பங்குபற்றினர். இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பிரதீப் 49.8 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்தார்.

Post a Comment