Header Ads



இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம் - முஸ்லிம்கள் கொந்தளிப்பு (படங்கள் இணைப்பு)

தூது

இஸ்லாத்தையும், முஸ்லிம்கள் உயிரினும் மேலாக கருதும் இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் அவமதிக்கும் விதமாக அமெரிக்காவில் இருந்து வெளியான திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக லிபியாவில் ஆவேசமடைந்த மக்கள் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதலில் தூதரக அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் வசிக்கும் யூதர் கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவனும், புனித திருக்குர்ஆன் பிரதியை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த கிறிஸ்தவ வெறியன் பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவனும் இந்த ”Innocence of Muslims”  என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து உலகம் முழுவதும் சோசியல் நெட்வர்க் தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு எதிராக எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலையில் இருந்தே எகிப்து தலைநகர் கெய்ரோவில்உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும், லிபியாவின் பெங்சாய் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்

லிபியாவில் தூதரகத்தின் மீது ராக்கெட் குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தியபடி திடீரென உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். இதில் ஒரு அமெரிக்க அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் பலருக்கு கை, கால்கள் உடைந்தன. அமெரிக்கக் கொடியை கிழித்து வீசியதோடு, தூதரகத்தையும்சூறையாடி, தீ வைத்தனர்.

இதையடுத்து லிபிய ராணுவம் விரைந்து வந்து நிலைமையைக்கட்டுப்படுத்தி மற்ற அமெரிக்கர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றது. அதே போல எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அமெரிக்க  தூதரகத்துக்குள் நுழைந்து அந் நாட்டின் கொடியை கிழித்து எறிந்து, கருப்புக் கொடியை ஏற்றி போராட்டத்தில்ஈடுபட்டனர்.
 






 

1 comment:

  1. அமெரிக்க,யூத சொறி நாய்கள் ஒவ்வொரு காலத்திற்கும் முஸ்லிம்கள் உணர்வுடன் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.நம் உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம் வெறி நாய்கள் வெற்றியடைந்து,நம்மை பலிக்கடாவாக்குகிறார்கள்.பயங்கரவாத மேற்கத்திய ஊது குழல்கள் முஸ்லிம்களுக்கு ரசனை,சகிப்புத்தன்மை,பொறுமை,இன்னும் என்ன என்ன தேவையோ அதெல்லாம் இல்லை என்று படம் காட்டி அதையும் காசாக்குவார்கள்.முட்டாள் பயல்களே! நீங்கள் இஸ்லாத்திற்கும்,முஸ்லிம்களுக்கும் எதிராக செய்யும் ஒவ்வொரு சூழ்ச்சிகளையும் அல்லாஹ் எங்களுக்கு வெற்றியாகத்தான் தருகிறான்.இன்னும் இன்னும் எங்களை கேவலப்படுத்துங்கள் அப்போதுதான் இஸ்லாத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று சிந்திக்க தெரிந்த மக்கள் குரானையும்,நபியையும் தெரிந்து,புரிந்து இஸ்லாத்தை நோக்கி வருவார்கள்.வந்த கொண்டும் இருக்கிறார்கள்.
    போப்பிலிருந்து எல்லோரும் இஸ்லாத்தின் வளர்ச்சியை பார்த்து அலறிக்கொண்டு,சதியாலோசனை செய்வதின் வெளிப்பாடே இது போன்ற சினிமாக்களும்,கார்டூன்களும்.அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைக்க நினைக்கும் இவர்களும் இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் இஸ்லாத்தினுள் நுழையும் காலம் வெகு தூரத்தில்லிலை.

    ReplyDelete

Powered by Blogger.