Header Ads



வயிற்று வலியால் துடித்த 7 வயது சிறுமியின் உயிரை பதம் பார்த்த டி.வி.

இம்தியாஸ் மௌலவி +  பிர்னாஸ் ஆசிரியர் 

பாதிமா ஆதியா இவர் பிபிலை, கொடிகமுவ முஸ்லிம் பாடசாலையில் தரம் 2ல் கல்வி கற்கும் மாணவி வயது 7. வகுப்பில் முதலாம் இடத்தில் வரும் திறமையுள்ள அமைதியான சக மாணவர்களுடன் அன்பாய் பலகும் ஒழுக்கமான மாணவி.
 
 11-09-2012 வழமைக்கு மாறாக பாடசாலையில் இருந்து நேரத்துக்கு முன்னரே வயிற்றுவலி எனக்கூறி வீடு செல்ல அவசரப்படுகிறாள். வகுப்பாசிரியர் அனுமதி மறுக்கவே அதிபரிடம் செல்கிறாள் அவரும் மறுக்கவே சோகம் ததும்ப தனக்கே உள்ள பாணியில் அமைதியாய் வகுப்புக்கு திரும்புகிறாள்
 
அதே நேரம் வீடு செல்ல வேண்டும் என்ற பரபரப்பு அவா அவளின் முகத்தில் படர்ந்திருந்ததை உணர முடிந்தது என கூறுகிறார் வகுப்பாசிரியர்.

வழமையான நேரதுக்கு பாடசாலை முடிவடையவே அவசர அவசரமாய் வீடு செல்கிறாள்.
 
சுமார் மணி மதியம் 12 இருக்கும் உம்மா ஆடையில் என்ன இவ்வளவு அழுக்கு என கேட்டு குளியலறைக்கு கொண்டுபோய் குளிக்கவைத்துவிட்டு  மகளின் ஆடையை கழுவுகிறார்.
 
மகளோ டி.வி. முன் வந்து ஒரு பக்கம் சாய்ந்தவலாய் தரையில் படுத்தவண்ணம் (வயிட்டு வலியால் என்னவோ) காலால் டி.வி. ஸ்டாண்டை மெல்ல மெல்ல தள்ள 'வீல்' உள்ள ஸ்டாண்ட் சுவர் பக்கம் நகர டி.வி. சிறுமி படுத்துறங்கும் பக்கம் முன்வருவதை அவள் உணராமல் இருந்திருக்கிறாள் போலும் பரிதாபமாய் தலையை தாக்கி கீழே சத்தத்துடன் விழுகிறது டி.வி.
 
சத்தம் கேட்டு  குளியலறையிலிருந்து உம்மா ஓடி வந்து பார்த்தபோது மகள் துடியாய் துடிக்கிறாள். உடனே பிபிலை வைதியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் உயிர் பிரிகிறது இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
 
(சுமார் 8 வருடங்களுக்கு முன்பு கொழும்பில் ஒரு வாகன விபத்தில் தனது தந்தை வபாத்தாக முன்னர் சவூதியில் இருந்து கொண்டுவந்தது இந்த 24சி பழைய மொடல் டி.வி. கிட்டத்தட்ட 30-40 கிலோ இருக்கும்)

பிறப்பதற்கு ஒரு மாதம் முன் தந்தையை இழந்தும் ஒழுக்கமாய் அமைதியாய் அண்டை வீட்டார்களின்  அன்பை பெற்றவலாய் வளர்ந்த இச்சிறுமியின் சோக முடிவு  தாங்க முடியாத துயரமே. 

அல்லாஹு தஆலா அந்த தாய் மற்றும் குடும்பத்தினருக்கு பொறுமையை கொடுத்தருள்வானாக... !

குறிப்பு: டி.வி. கொம்பியூடர் ஏனைய மின் உபகரணங்கள் அவைகளை வைக்கும் ஸ்டாண்ட்கள் பாதுகாப்பான முறையில் விசேடமாக சிறுவர்களுக்கு ஆபத்து இல்லாதபடி வைப்பதன் மூலம் இவ்வாறான துரதிஷ்டமான சம்பவங்கள் ஏற்படாமலிருப்பதை உறுதிப்படுத்துவது  ஒவ்வோர் பெற்றோர் பாதுகாவலர்களின் பொறுப்பும் கடைமையுமாகும்.
 

3 comments:

  1. "Innalillahi Va innailaihi rrajioon"
    Ya allah! let this child Pirdous.

    ReplyDelete
  2. அல்லாஹ் இந்த மாணவியின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்க்கையை வெற்றிகரமானதாக ஆக்கி வைக்கட்டும்.

    ReplyDelete
  3. இன்னாஹ்லில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.இது(விதி) அல்லாஹ்வின் நாட்டம்.ஆனால் முதல்,இரண்டாம் .
    குற்றவாளிகள் ஆசிரியர்,அதிபர்.அந்த மாணவியை விசாரித்து உண்மை தெரிந்து உடன் வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம்.அந்த தாயிக்கு இறைவன் மன ஆறுதலையும்,பொறுமையையும் கொடுப்பானாக

    ReplyDelete

Powered by Blogger.