Header Ads



வவுனியாவில் புலிகளின் 20 கோடி பணம் மீட்பு

தமிழீழ விடுதலைப் புலிகளினால் வவுனியா பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்ட 20 கோடி ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பணத்தையும் ஆயுதங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வவுனியா அச்சுபுரம் வாவிக்கு அருகாமையில் இந்தப் பணமும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தப் பணத்தையும் ஆயுதங்களையும் மீட்கச் சென்ற தரப்பினர் பொலிஸாரைக் கண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த கும்பலின் பிராடோ வாகனம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். UN

2 comments:

  1. INTHAPPANANGAL MUSLIKALIDIDAM IRUNTHU KOLLAYADIKKAPPADDA PANANGALAAKUM . ITHU MUSLIGKALUKKE SONTHAM.ARASUKKU WAALADDUM MUSLIM AMAICHARKAL ITHAYAAWATHU MEEDDU MUSLIKALUKKU KODUKKALAAME.

    ReplyDelete
  2. இந்தப் பணம் யாழ்ப்பாண முஸ்லிம்களிடம் புலிகளால் கொள்ளையடிக்கப் பட்டதில் எஞ்சியது. எனவே இது யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு பயன் படுத்தப் பட வேண்டும். ரவுப் ஹகீம் என்ற நீதி அமைச்சர் இப்பணத்தை யாழ் முஸ்லிம்களுக்கு பெற்றுத் தருவாரா. ? இதனையும் தனது கிழக்கு தேர்தல் நிபந்தனையாக விதிப்பார அவர்.

    ReplyDelete

Powered by Blogger.