Header Ads



காட்டெருமையின் மதிப்பு - 18 கோடி ரூபா

 
தென்ஆப்பிரிக்காவில் பிரடோரியா பகுதியில் உள்ள பெலா பெலா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜேக்குயஸ் மலான். இவரது பண்ணையில் ஒரு ஆண் காட்டெருமை இருந்தது. அந்த காட்டெருமை ரூ.18 கோடிக்கு (இந்தியா பெறுமதி) ஏலம் போனது. கொரிஷான் என பெயரிடப்பட்டுள்ள இதற்கு 4 வயது 10 மாதம் ஆகிறது. இது அபூர்வ வகை இன காட்டெருமையாக கருதப்படுகிறது. அதன் கொம்புகள் 1.3 மீட்டர் நீளமும், 41 செட்டிமீட்டர் அகலமும் உள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் பிரசித்தி பெற்ற இந்த காட்டெருமை இனத்தை முன்பு வேட்டையாடி அழித்து விட்டனர். தற்போது இவரது பண்ணையில் மீண்டும் இந்த இன காட்டெருமை உருவாகி உள்ளது. இதன்மூலம் இனப்பெருக்கம் செய்து மீண்டும் அபூர்வரக காட்டெருமையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகத்தான் இந்த ஆண் காட்டெருமை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சென்ட்லா என்ற காட்டெருமை ரூ.6 கோடிக்கு ஏலம் போனது சாதனையாக கருதப்பட்டது. தற்போது அதை கொரிஷான் முறியடித்துள்ளது.

No comments

Powered by Blogger.