'சலுகைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளியுங்கள்'
TN
முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்குத் தேவையான சகல சலுகைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கமே வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சலுகைகளையும், உரிமைகளையும் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் முஸ்லிம்கள் அரசுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவரும், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறை பிரதி அமைச்சருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
சகல சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம் சமூகம் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சிலர் அரசியல் இலாபத்துக்காக முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்து தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். முஸ்லிம்கள் இவற்றுக்கு ஏமாற வேண்டாம்.
முஸ்லிம் நாடுகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான உறவும் மிகவும் பலம்வாய்ந்ததாக காணப்படுகிறது. முஸ்லிம்கள் விடயத்தில் அக்கறை கொண்ட ஜனாதிபதி அவர்கள் தலைமையிலான அரசுக்கு முஸ்லிம் நாடுகள் அரபு உலகம் தமது பூரண ஆதரவை வழங்கி வருகிறது.
அரசுடன் இணைந்து கொண்டு, அரசின் வரப்பிரசாதத்தை அனுபவித்துக் கொண்டு அரசிடம் இன ரீதியான போக்கு உள்ளது என்று விமர்சித்து திரிவதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவற்றுக்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது.

தம்பி பைசர் முஸ்தபா அவர்களே! தம்புள்ளையில் தற்போது என்ன நடக்கின்றது? பள்ளிவாயலுக்கு என்னாயிற்று என்று கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்.
ReplyDelete