Header Ads



பள்ளிவாசல்களுக்கு ஆபத்து இல்லை - அடித்துக்கூறுகிறார் அதாவுல்லா


TM

எஸ்.எம்.எம்.றம்ஸான்

பள்ளிவாசல்களுக்கு ஆபத்து இல்லை. அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இன்று அரசாங்கம் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் திங்கட்ழமை இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தை பிச்சைக்காரனின் காலில் ஏற்பட்ட புண்ணை போன்று முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்துகிறது. பள்ளிவாசல்களுக்கு ஆபத்து இல்லை. அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இன்று அரசாங்கம் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு குழுவினர் செய்யும் செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது.

வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியது போல், கிழக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்ட முடியாது. இங்கு மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்து கிழக்கு மக்களுக்கு செய்ய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்லில் முஸ்லிம் காங்கிரஸின் சகோதரர் ஹஸன் அலி போன்றவர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு ஆணை தாருங்கள் என்று கோரினர். இத்தேர்தலிலும் வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்கும் திட்டத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ளது. 

இரு மாகாணங்களையும் மீண்டும் இணைக்கும் திட்டத்தினை முஸ்லிம் காங்கிரஸின்  போட்டியிடும் வேட்பாளகளுக்கு தெரியாது. எனினும் இத்திட்டத்தை உயர் மட்ட உறுப்பினர்கள் அறிவார்கள். இது பெரியதோர் வியாபாரமாகும். இந்த வியாபாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறது.

யுத்த பயங்கரவாதத்தின் போது வைத்தியசாலைகள் மீது கூட மக்களிடைய சந்தேகங்கள் எழுந்ததுடன் பயமும் இருந்தது வந்தன. இந்த நிலை இன்று  இல்லை. அது மாறி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வைத்தியசாலைகள் பொதுவானவை. அது எல்லா இனங்களுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறன. 

முன்னொரு காலத்தில் எமது வைத்திய தேவைக்காக மட்டக்களப்புக்கும் பதுளைக்கும் செல்ல வேண்டியிருந்தது. இன்று ஒவ்வொரு ஊரிலும் வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  இவ்வைத்தியசாலைக்கு  ஒதுக்க வேண்டியதை உரியவர்கள் ஒதுக்க வேண்டும் அல்லது கொடுப்பவர்களை கொடுக்க விட வேண்டும்" என்றார்.

3 comments:

  1. மாகாணசபை அமைச்சர் ஏ. எல். எம் அதாவுல்லா என்ன காரணத்தால் இப்படி முட்டால் தனமாய் கூறியிருக்கிறார் என்று தெறியவில்லை. இவர் இங்கு கூறும் அரசியல் கதைகளை பற்றி நான் பேசவில்லை. ஆனால் பள்ளி விடயத்தில் அவருக்கு உண்மை தெரியாமல் கதைக்கிராறோ அல்லது தெரிந்தும் யாரோ சிலருக்காக இப்படி முட்டால்தனமாய் புலம்பிக்கொண்டிருக்கிறாறோ தெறியவில்லை.
    அமைச்சரே ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனை செயற்பாடுகள் நடைபெருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? சமூகத்தின்மீது அக்கறை உள்ள அரசியல்வாதிகளுக்கு அது தெறிந்திருக்கும். எல்லா பள்ளிவாசலுக்கும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்குகிறது என்று கூறினீர்களே. முடியும் என்றால் அப்படி பாதுகாப்பு வழங்கப்படும் ஒரு பள்ளிவாயிலை கூறுங்கள் பார்க்கலாம். தம்புள்ள பள்ளி விடயத்தில் முஸ்லிம்களுக்காக ஒரு வார்தையாவது பேசாத அமைச்சர்மாருக்கு பள்ளியின் பாதுகாப்புபற்றி பேச எந்த உரிமையும் இல்லை. நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று நினைத்து வாய்வித்தைகள் விட வேண்டாம். இங்கு என்ன நடக்கிறது என்று உங்களைவிட மக்கள் தெறிந்து வைத்திருப்பார்கள். நீங்கள் ஏதாவது கதைக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. எனவே இனியும் இப்படி முட்டால் தனமாய் கதைக்க வேண்டாம்.
    Jaffna Muslim இதை மாகாணசபை அமைச்சர் அதாவுல்லாவுக்கு கூறுங்கள்.

    ReplyDelete
  2. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எந்தவொரு அரசியல் தலைவனும் அதாவுல்லாஹ் தெரிவித்தது போன்ற சமூகத்தைக் காட்டிக்கொடுக்கின்ற பதில்களை தெரிவிக்கமாட்டான். இவர் பாதவிகளுக்காகவும், அரச சொகுசுகளுக்காகவும் மாத்திரமே அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தி மக்களது பிரச்சினைகளை திசை திருப்ப முயல்கின்றார்.

    ஏலவே ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தம்புள்ளைப்பள்ளி சிங்களப் பேரினவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டபோதும், எதுவும் நடைபெறவில்லை என்று காவியுடை பயங்கரவாதியிடம் மண்டியிட்டு தன்னிச்சையாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சைபரால் பெருக்கிவிட்டார்.

    மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுத்துநிறுத்தும் சக்கதிகளுக்கெதிராக எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத இலங்கை அரசாங்கத்திற்கு வெளிப்படையாகவே வக்காலத்துவாங்கும் வகையில் றிஷாட் பதியுதீன் அவர்கள் கண்மூடித்தனமாக மஹிந்தவின் அரசாங்கத்தில்தான் முஸ்லிம்கள் கௌரவமாக வாழ்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். (http://www.jaffnamuslim.com/2012/08/blog-post_6683.html)

    மறுபுறம் தனித்துவக்கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள், வெற்றிலைச்சின்னத்திற்கு வழங்கப்படுகின்ற 3 ஆசனங்கள் சமூகத்தின் இருப்பு. விடிவு என்பவற்றை கேள்விக்குறியாக்கிவிடும் என்று முளங்கிவிட்டு, அதே வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வடக்கு மக்கள் கால்களில் தவம் கிடக்கிறார். (http://kattankudi.info/2012/08/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/)

    எனவே இவர்களுடைய கபடை நாடகம் மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரிக்கின்ற தந்திரோபாயம் எல்லாவற்றையும் மக்கள் தவிடுபொடியாக்கவேண்டும். மக்கள் வாக்குகள் அளிக்குமுன் இவர்களுடைய கபடைநாடகங்களுக்கெதிராக அவர்களை நோக்கி கேள்விகளைக் கேட்கவேண்டும்.

    நாம் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் மௌனிகளாக இவர்களுடைய கூரைத்தகடுகளுக்காகவும், சில ஆயிரம் ரூபாய்களுக்காகவும் இன்னோரன்ன கண்துடைப்பு அபிவிருத்திகளையும் நம்பி நமது பொன்னான வாக்குகளை மண்ணாக்கப்போகின்றோம்??

    இலங்கையின் தற்போதய இனத்துவேசம்கொண்ட அரசாங்கத்திற்கு கூஜா தூக்குகின்ற இவ்வரசியல் தொழிலாளர்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்படவேண்டும். இவர்களுடைய மில்லியன், பில்லியன், திரில்லியன் அபிவிருத்திகள் மாயையில் சிக்குண்டு தமது பெறுமதியான வாக்குகளை இவர்களுக்கு தாரை வார்க்கக்கூடாது. இவர்கள் ஒற்றுமைப்படவும் மாட்டார்கள் தமது சுகபோக அரசியலிலிருந்து நீங்கி மக்கள் நலன் சார்ந்த அரசியலை பற்றி சிந்திக்கவுமாட்டார்கள்.

    எனவே மக்கள் தமது எதிர்கால அரசியல் ஒழுங்கு குறித்து சிந்திப்பதாக இருந்தால், தனிநபர் அரசியல் தொழிலாளர்களின் அரசியல் சுகபோக வாழக்கைக்கு சாவுமணி அடித்து, மக்கள் நலன்சார்ந்த மாற்று அரசியல் ஒழுங்கு குறித்து சிந்திக்கவேண்டும். இதற்கு, மக்கள் எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலை தமக்கான மாற்று அரசியல் சக்தியொன்றை நிறுவுவதற்கான களமாகப் பயன்படுத்த முடியும்.

    சிந்தித்து வாக்களிப்போம்.

    ReplyDelete
  3. அதாவுல்லாஹ் உண்மை உரைத்துவிட்டார்
    இலங்கை திருநாட்டில் அதாவுல்லாக்கள் இல்லையன்றால் பள்ளிவாசல்களுக்கு ஆபத்தில்லை என்பதே அமைச்சரின் கருத்து.....

    ReplyDelete

Powered by Blogger.