இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பெயர் மாற்றம்

 
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம்,  இலங்கை ஊடகவியலாளர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பொது நூலகத்தில் நேற்று நடைபெற்ற சங்கத்தின் உறுப்பினர்களை தெரிவு செய்யும் வருடாந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது சங்கத்தின் அதிகாரிகள் உட்பட 24 நிறைவேற்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சங்கத்தின் தலைவராக லசந்த ருகுணுகேவும் செயலாளராக ரங்க ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டதுடன்,  பொருளாளராக துமிந்த சம்பத் தெரிவு செய்யப்பட்டார்.

தேசிய அமைப்பாளராக உபாலி டி சேரம். உப தலைவர்களாக காஞ்சன மாரசிங்க, ஞானசிறி கொத்திகொட, டிட்டோ குகன், பிக்குன் மேனக ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன் உப பொருளாளராக தாஹா முஸ்ஸாம்மில் தெரிவுசெய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.