''எனது மையித்தின் மேலாகத்தான் ஹக்கீம் இந்த ஊருக்கு வர முடியும்''
By Omar Farook
அமைச்சர் ரவூப் ஹகீம் அக்கரைப்பற்று இப்தார் நிகழ்வுக்கு வரும்போதே அவரது வாகனத்தை உதுமாலெப்பையின் அடியாட்கள் அட்டாளைச்சேனையில் வைத்து தாக்கினர். சென்ற வருடம் போலவே ஹகீமை அக்கரைப்பற்று மண்ணில் நோன்பு திறக்க வரவிடமாட்டேன் என அதாஉல்லா இம்முறையும் களத்தில் குதித்தார்.
இப்தார் ஏற்பாடுகள் நடைபெற்ற இடத்திற்கு காலையிலேயே அனுப்பப்பட்ட அதாஉல்லாவின் குண்டர்கள் அந்த இடத்தில் கலகம், தீவைப்பு மற்றும் நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்கள் தயார் செய்யப்பட் உணவுகள், ஆயிரக் கணக்கான நீர்ப்போத்தல்கள், ஈச்சம்பழம் ஆகியவற்றை வீதியில் இழுத்துப் போட்டு மிதித்து நாசமாக்கினர். இருந்தபோதும் நோன்பு திறக்கும் வேலைகள் மீளவும் நடைபெற்றன.
மாலையில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேச சபை பிரிவுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தே.கா. குண்டர்களும் அதாஉல்லாவின் குண்டர்களுடன் இணைந்து கலகத்தில் ஈடுபட்டனர். ஹகீம் இந்த ஊருக்கு வருவது தனக்கு பெருத்த அவமானம் என்றும் தனது மையித்தின் மேலாகத்தான் ஹகீம் இந்த ஊருக்கு வர முடியும் என்றும் அதாஉல்லா தனது குண்டர்களுக்கு ஆணையிட்டார்.
தொடர்ந்தும் அவர்கள் நடாத்திய தாக்குதலில் இப்தார் நடைபெறவிருந்த இடத்தைச் சூழவிருந்த பல வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டது. இத்தனையையும் அதாஉல்லா நீர்ப்பாசன அதிகார சபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிக்குள்ளிருந்தே வழிநடாத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஹகீம் அக்கரைப்பற்றில் நோன்பு திறக்கும் நிகழ்விற்கு வருகை தராதது அவருக்கு மக்கள் மத்தியில் அபிமானத்தையே அதிகரித்திருக்கின்றது. அவர் வந்திருந்தால் பல உயிரழப்புக்களை அக்கரைப்பற்று மண் நேற்றுச் சந்தித்திருக்கும்.
ஊர் இளைஞர்களின் கொலைக்குக் காரணமாக ஹகீம் அமைந்தார் என்ற பிரச்சரத்திற்கும் அதாஉல்லா சகல ஏற்பாடுளையும் செய்திருந்தார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, நீர்ப்பாசன அதிகார சபை ஆகியவற்றை அதாஉல்லா குண்டர்களைப் போஷிக்கின்ற இடமாகப் பாவித்துவருவதனையும், அவரது றமழானையும் மதியாத மனித உரிமை மீறல்களையும் மக்கள் அருவருப்புடன் நோக்குவதும் குறிப்பிடப்பட வேண்டியதே.

சிங்களவனுக்கு நோன்பு திறப்பிக்கும் சமூகம் முஸ்லீமான ஒரு குழுவை தடுப்பதை மனிதாபிமானமும் மார்க்கநேயமும் உள்ளஒருவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாது
ReplyDeleteபல சாம்ரஜ்யங்களும் சிற்றரசுகளும் அழிந்து போனது போல் இவரது அழிவும் தூரத்தில் இல்லை
@ Omar Farook,
ReplyDeleteஇன்று அதிகமானவர்களிடம் கமெராவுடன் கூடிய கைத்தொலைபேசிகள் இருந்தும், நீங்கள் வர்ணித்துள்ள கேவலமான நிகழ்வுகள் குறித்து புகைப்படங்களையோ, வீடியோக்களையோ வழங்காதது ஏன்?
இப்படிப் பட்டவர்களெல்லாம் மெளத்தாப் போவது குறித்தோ, அவர்களின் மையத்தின் மீது ஷைத்தான் வருகின்றானா, எருமை மாடு வருகின்றதா என்பது குறித்தோ முஸ்லிம்கள் கவலைப் படத் தேவையில்லை.
ReplyDeleteஇவர்களில் யாரால் முஸ்லிம் சமூகத்திற்குக் அதிக கேடோ, அவனின் ரூஹை அல்லாஹ் விரைவில் கைப்பற்ற, பெயர் குறிப்பிடாமல் பொதுவாக துஆ கேளுங்கள். அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன், அவர்கள் இரகசியமாக திட்டமிடுபவற்றையும் அறிந்தவன்.
அதா உல்லா ஒரு பண்பாடு அற்றவன் என்பதை தானே நிரூபித்து மு. கா க்கு மேலதிக வாக்குகளை வழங்கியுள்ளார். வாழ்த்துக்கள் அதா உல்லா
ReplyDelete///மையித்தின்/// என்ற சொல் என்னத்தைக் குறிக்கிறது. மயிர் என்பதைக்குறிக்கிறதா அல்லது உயிரற்ற உடல் என்பதைக் குறிக்கிறதா?
ReplyDeleteமையம்- என்பது உயிரற்ற உடலையும் குறிக்கிறது.
ஆக அக்கரைபற்று அட்டால சேனையும் முஸ்லிம்கள் வாழும் இடம் அல்ல காடையர்களும் குண்டர்களும் வாழும் இடமாக்கும்? தேர்தல் முடிந்ததும் இந்த காடையர்களும் குண்டர்களும் எங்கேபோய் விடுகின்றனர் தொடராக குண்டர் வேலையும் காடைதனமும் புறியாமல்
ReplyDeleteஇறைவனது நாட்டம் அதாஉல்லாஹ்வின் மய்யித்தை அடக்கம் செய்வதற்குத்தான் அமைச்சர் ஹகீம் அக்கரைப்பத்துக்கு வருவார் என்றிருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.
ReplyDeleteivannallam muslima
ReplyDeleteHello intha umar farook enpavar yaau verumane peyarai sonnal sariyakuma.Jaffna muslim thalam ippadi oru pakka saarpaka eluthuvoorin katturaikalai pirasuriththal ungal mathippu kurainthuvidum.Unmai oru puram irukka ippadi oru seithiya? ....
ReplyDeleteirandu perume kadainthu eduththa muttaalgal, makkalai emaatrupavargal
ReplyDeleteAddalaichenai le Uthumaleppe de office irunde idem illame iruku vandu porikkikku pohetum ande Athaullah!
ReplyDeleteஇங்கே வன்முறை செய்திருப்பது இருகூட்டம் கண்டிப்பதானால் இருதரப்பையும் கண்டியுங்கள் இல்லை ஒருதரப்பு செய்யும் அநியாயதை கண்டித்து மறுதரப்பு செய்யும் வன் முறையை ஊக்கபடுத்தினால் அதே அநியாயம் உங்களுக்கு நேர்கையில் குரல் கொடுக்க யாரும் வரமாடர் உன்னக்கு இதுவும் வேனும் இன்னும் வேனும் என்று வஞ்சம் தீர்போரையே காணமுடியும் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள் நாம் நீதி செழுத்தாம்ல் நீதமாக நடந்துகொள்ளாமல் அடுத்தவர் நீதமாக நடந்துகொள்வார் என எதிர்பார்பது மடத்தனம் ஆரம்பமாகிய வன்முறையை மேலும் தூபமிட்டு கொழுந்துவிட்டெறியவைக்கும் கருத்துகளால் உங்களுக்கு என்ன பயன் முஸ்லிமோ முஸ்லிம் இல்லாதவனோ மனிதனாக வாழ இந்த உலகில் யாறுய்க்கும் உரிமை உண்டு
ReplyDeleteIt is regret to know most of the people in support of Mr. Hakeem.in fact if you can see the history Mr. Rauf hakeem never visited akkaraipattu apart from during elections neither he has done any service towards akkaraipattu people.just because athaullah didn't allow Hakeem to visit AKP doesn't really show Mr. Rauf Hakeem better personnel than Mr.Athaullah, if Athaullah visit Kalmunai samething will happen to him by Rauf Hakeem people..it is just merely a politics...
ReplyDeleteஉலமா சபையின் வேண்டுகோள் காற்றில் பறந்து போய் விட்டன. இப்போ புரியுதா யார் அட்டவடித்தன அரசியல் செய்கிறது என்று.
ReplyDeleteMr. Rauf why Don't u visit AKP during the other ramadan times for iftar. then u you will be welcomed. not during election time for the fake iftar.
ReplyDeleteஊருக்கு ஊர் நாளாந்தம் நோன்பு திறந்து திரியும் அரசியல் வாதிகளே , எலெக்சன் காலத்தில் மட்டும் பிக்னிக் போவது போல் நடமாடி நாடகம் காட்டினால் மட்டும் போதுமா
ReplyDeleteஅரசியல் வாதிகளுடன் நோன்பு திறந்தவர்களில் எத்தனை பேர் மக்ரிப் தொழப் போனார்கள் . நோன்பு திறப்பதைன் மகிமையை பாழாக்கும் அரசியல் வாதிகள் .
நோன்பு திறக்கும் சாட்டில் பாமர மக்களின் வோட்டை சூறை ஆடும் போக்கிரி அரசியல் வாதிகள் .
நோன்பு திறக்கும் போது வுழு வுடன் இருக்க வேண்டும் , ஆடு மாடு போல் திண்டு விட்டு போவது நோன்பு திறப்பதல்ல . கட்சியல் மட்டும் முஸ்லிம் என்று வைத்துக் கொண்டால் மட்டும் போதாது
போன வருடம் உங்களுக்கு நோன்பு திறக்க கன்சி ஊத்த வந்தார்களா ? ஏன் இப்போது உங்களக்கு கன்சி ஊத்துகிரார்கள் , உங்களில் எந்தனியோ படித்த வாலிபர்கள் , உங்களுக்கு வெட்கம்மாய் இல்லை ? ஏன் போன வருடம் கன்சி ஊத்த வரவில்லை என்று கேட்க உங்கள்ளுக்கு முடியாத ?
@ Mohideen Bawa
ReplyDeleteபொதுவாகவும், யதார்த்தமாகவும் உங்கள் கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள். உடன் படுகின்றேன், ஆனால் ஒரே ஒரு விடையத்தில் தெளிவை வேண்டி நிற்கின்றேன்..
சகோதரரே, நோன்பு திறக்கும் பொழுது வுழூவுடன் இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். வுழூவுடன் செய்ய வேண்டிய அமல்கள் என்பதில் 'நோன்பு திறப்பது' அடங்கியிருப்பதை இதுவரை எந்த ஹதீஸிலும் நான் கண்டதில்லை.
தொடர்ந்து வரும் மக்ரிப் தொழுகையை சிரமமின்றி, தாமதமின்றி நிறைவேற்றிக் கொள்வதற்காக இதுவரை காலமும் வுழூ செய்கின்றேனே தவிர, நோன்பு திறப்பதற்காக என்று பிரத்தியோகமாக ஒருபொழுதும் வுழூ செய்ததில்லை.
தயவு செய்து தகுந்த ஆதாரத்தை தர முடியுமா? நீங்கள் சொல்லுவது சரியாக இருந்தால், சரியான ஆதாரத்தை தருவதன் மூலம், மேற்படி செயலை இங்கே பார்த்துத் தெரிந்து மற்றவர்கள் பின்பற்றும் காலமெல்லாம் உங்களுக்கும் நன்மைகள் கிடைக்கும். உங்களின் பதிலை எதிர்பார்க்கின்றேன்.
(நீங்கள் சொல்வது தவறாக இருந்தால், அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சொல்லாத ஒரு நிபந்தனையை நோன்பு விடையத்தில் உருவாக்கிய குற்றம் உங்கள் மீது வந்து விடும்.)
அல்லாஹ் உங்களுக்கு மார்க்கத்தில் தெளிவான அறிவைத் தருவானாக.
இது இரண்டாவது தடவை,இப்தார் இபாதத் இதில் உண்மையான முஸ்லிம் குழப்பம் விளைவிக்கமாட்டான்,இப்படி செய்வது காட்டுமிராண்டித்தனம்
ReplyDeleteMADAWALAYIL ATHAULLAHKU ETHUKKU IFTHAR.......
ReplyDeleteவெட்கித் தலை குனிய வேண்டிய நிகழ்வுகள் நாளாந்தம் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்ற இவர்கள் ஒரு சமுகத்தினைச்சார்ந்த சகோதரர்கள் என்பதை மறந்து செயல்படுகிறார்கள் இன்று தனக்குள் மோதிக்கொள்ளும் எந்த அரசியல் வாதியும் நாளை எதிரியாகவே மேடையேறுவதில்லை அவர்கள் கைலாகு செய்து சமரசம் செய்தவண்ணம் தங்களது ஆசனங்களில் அமர்ந்து விடுவார்கள் வீணாக இவர்களுக்காக போக்கப்பட்ட குருதியும் உயிர்களும் அனியாயங்களும் திரும்பிக்கிடைப்பதில்லை இவற்றை மறந்த என் சமுகத்து வாலிபன் எல்லாக்காலத்திலும் கண்மூடிய மடையர்களாக செயல்படுகிறார்களே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது அற்ப அரசியலுக்காக தனது சகோதரனின் உயிரையே போக்கத்துணிந்து நிற்கின்ற அன்புச் சகோதரனே நீ நாளை இறைவனிடத்தில் தப்பிக்க வேண்டும் என்பதை மறந்திடாதே உன்னை உசுப்பேத்திவிடுகின்ற எந்த அரசியல் வாதியோ சுயநலக்காரர்களோ நாளை உனக்காக யாரும் இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை சற்று சிந்திப்பீராக
ReplyDeleteஅரசியலில் இதுவொன்றும் புதிதல்ல. தான் இன்னும் பலத்துடன் உள்ளேன் என்பதை பறைசாற்றியுள்ளார். (மக்கள் பலத்தை அல்ல) யார் வந்தாலும் மக்கள் என்னுடன் இருப்பார்கள் என்ற நிலை இருந்தால் ஏன் இந்தக் கலகம். அஞ்சுகிறார்????? அஞ்ச வேண்டிய விடயம் தானே.
ReplyDeletenahareeham illatha poltical athaullavinudayathu
ReplyDeleteIRU THARPPUM THAVRU SAITHU IRUNTHAALUM , ORU NEETHI AMAICHARAI PAARTHU EN MAYYITUKKU MEALAALTHAAN NEE VARANUM ENRU SONNAAL AVARIN AASAYAI EAN THALLI POODUVATHU , ETHIR VARUM PUNITHA ULHIYA THINATTIL INTHA SHITHAANAI MUSLIM UMMAVAI VIDDU KALATTI VIDUVOOMEA ?????
ReplyDeleteஇவர்களுக்கு தெரியாது அரசியல் வேறு மார்க்கம் வேறு இவைகள் காடையர்களுக்கு தெரியுமா ? அதாஉல்லாவின் பயணம் மிக நீண்ட தூரமில்லை ?
ReplyDeleteathaullah has no clue of what he is doing because when breaking fasting will you put sand inside the porridge ohh he put it
ReplyDeletebut he will break fasting for buddist inside mosque how crazy isnt it ?
because he is the god of akkaraipattu
He is a dictator in akkaraipattu
He is asking weather anybody put kept stones in akkaraipattu for building all what athaullah knows is throwing stones for any people supporting Srilanka muslim congress threating in the night time sending people to house threating and assaulting people
we do not trust what he does really sorry for akkaraipattu educated poppulation is under threatened by uneducated politicians
my deepest sympathy for akkaraipattu people
akkaraipattukku Rauf hakeem vanthu vittar
ReplyDeleteRauf hakeem came to akkaraipattu today when he is going to die
முஸ்லிம்கள் ஒன்றுபட்டு இனஒற்றுமைக்காக பாடுபடவேண்டிய கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம். ஒன்றுபடுதல் என்பது மறுக்கமுடியாத தேவையாக உள்ளது. நம் எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ, நம் தியாகம் அவசியம் இப்போது. தற்பெருமைக்காக, நிகழ்கால நடப்பு உணராது, முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் பற்றி கவலை படாது, நமக்குள்ளேயே சண்டை பிடிப்பது ஏன்? விட்டுக்கொடுத்து ஒன்றுபடுவோம், முஸ்லிம்களுக்கான எதிரான பிரச்சினைகளை சமாளிப்பது பற்றி யோசிப்போம்.
ReplyDelete