Header Ads



பள்ளிவாசலில் ரமளான் 27 சிறப்புத் தொழுகை - சிங்கள இனவாதிகள் வெளியே கோஷம்

ராஜகிரிய கிறீடாப்பிட்டிய ஒபயசேக்கரபுர பள்ளிவாசலில் நேற்று புதன்கிழமை இரவு புளித ரமளான் நோன்பின் 27 நாள் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை சிங்கள இனவாதிகள் பள்ளிவாசலுக்கு வெளியே நின்று கோஷம் போட்டுள்ளனர்.

அவ்வேளையில் குறித்த பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் இதனை எமது இணையத்திற்கு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அந்த ஆசிரியர் மேலும் குறிப்பிடுகையில்,

பள்ளிவாசலில் நாங்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்ததோம். திடீரென பள்ளியை சுற்றிவளைத்த சிங்கள இனவாதிகள் பள்ளிக்கு வெளியே நின்று கோஷமெழுப்பிப் கொண்டிருந்தனர். உடனடியாகவே அவ்விடத்திங்கு பொலிஸாரும் வந்தனர். பொலிஸார் வந்தபோதும் சிங்கள இனவாதிகளின் தொடர்ந்து கோஷம் போட்டனர்.

அந்த சிங்கள இனவாதிகளின் நோக்கம் எல்லாம் எமது தொழுகைக்கு இடையூறு விளைவிப்பதே ஆகும். முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பதும் அவர்களின் நோக்கமாக இருந்தது.

இதனால் தஸ்பீஹ் தொழுகையை நிறைவேற்றவும், தௌவ்பா செய்யவும் மேலதிக நேரம் தேவைப்பட்டது எனவும் வேதனையுடன் குறிப்பிட்டதுடன், அல்லாஹு அக்பர் என்று சொல்லும் போதெல்லாம் அவர்களும் பதிலுக்கு ஏதோ கோஷம் எழுப்பினர் எனவும் சுட்டிக்காட்டினார்.

4 comments:

  1. இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளையும் இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆன் அஸ்ஸுன்னா கட்டாத 27 விஷேடம், தவ்பா, தஸ்பீஹ் என்று அல்லாஹ்வின் இல்லங்களில் மண்டையை உடைத்துக் கொண்டு அமல் என்று எண்ணிக் கொண்டு செயற்பட்டால் எமது முஸ்லின் உம்மாவுக்கு இதுவும் வரும் இன்னமும் வரும். அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

    அமல் விடயங்களில் இஸ்லாமிய அனுகுமுறையோடு நிதானமாக செயற்பட வேண்டும். தேவையில்லாத வர்ண மின் விளக்குகள், தொழுகை மற்றும் பயான்களை ஒலி பெறுக்கியில் நடாத்துதல், வீதி ஒழுங்குகளைப் பேணாத வாகனத் தரிப்பு என்பவற்றை தவிர்ந்து கொள்வது எதிரிகள் நம்மீது அடந்தேர்வதை தடுத்து நிறுத்தும்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் இஸ்லாத்தை கொலை வெறி இல்லாமல் பின்பற்றக் கூடிய மக்களாக என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்!

    ReplyDelete
  2. முஸ்லிம்களின் பள்ளிவாளில் நடைபெறும் நிகழ்வுகளில் பேரினவாதிகள் ஆதிக்கம் செலுத்தவோ, தலையிடவோ முயல்வதனை ஒருபொழுதுமே அனுமதிக்க முடியாது. அடிப்படை மனித உரிமை மீறல் அடப்படையில் இவர்கள் கைது செய்யப்பட வேண்டும். பாதுகாப்புக்கு உள்ள போலீசார் என்ன செய்கின்றார்கள்?

    தேர்தல் என்று வந்துவிட்டால் நிறைய (முஸ்லிம், முஸ்லிமல்லாத) தலைவர்கள் முஸ்லிம்களுக்காக உயிரையும் கொடுக்கத்தயாராக இருப்பது போன்று மேடைகளில் பேசுகின்றார்கள், அறிக்கை விடுகின்றார்கள், இவர்கள் எல்லாம் இது போன்ற அசம்பாவிதங்களின் பொழுது காணாமல் போய் விடுகின்றனர். எல்லாம் முடிந்ததும், சிகிச்சை அளிக்காமல் நோயாளி இறந்த பின்னர் மையத்து வீட்டில் துக்கம் விசாரிப்பது போன்று சென்று எதோ பேசி விட்டு, புகைப்படம் எடுத்து ஊடகங்களில் பிரபல்யப் படுத்திக் கொள்கின்றார்கள். (ஒட்டு மொத்தமாக் எல்லோரையும் சொல்லவில்லை)

    பள்ளிவாசல் அடாவடிகளில் ஈடுபடும் எவனாவது ஒருவன் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. இது அரசின் உண்மையான முகத்தைக் காட்டுகின்றது. முஸ்லிம்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாக காட்டிக்கொள்ளும் தலைவர்கள் யாரும் இது குறித்து எவ்வித அழுத்தமும் கொடுத்ததைக் காணோம்.


    அதே நேரம், ரமழான் 27 க்கு என்று மட்டும் எந்தவித விசேட தொழுகைகளோ, முக்கியத்துவமோ இல்லை என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடைசிப் பத்தின் ஒற்றை படையான 5 இரவுகளும் (21, 23, 25, 27, 29) ஒரே விதமாகவே நோக்கப் பட வேண்டும்.

    அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு மறக்கடித்ததை கண்டுபிடிக்கும்
    அளவுக்கு நாம் மேதாவிகள் என்று நினைப்போமேயானால், அல்லாஹ்வின் கோபத்தை எதிர்பார்க்கவும் தயாராக இருக்க வேண்டும்.

    லைலத்துல் கத்ருடைய இரவு எது என்பது நபிகளாருக்கு இயல்பாக மறக்கவில்லை, மாறாக அல்லாஹ்வே மறக்கடித்தான் என்னும் பொழுது, அதனை கண்டுபிடிக்க நாம் யார்?

    ஈமான் கொண்டு அல்லாஹ்வையும் அவன் தூதரையும் ஏற்றுக் கொண்டிருந்தும் கூட, இந்த சிறு விடையத்தில் கூட நம்மைத் திருத்திக் கொள்ளாமல், மார்க்கத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ள முயற்சிக்காமல், ஆண்டாண்டு காலமாக ஒரே தவறை மீண்டும் மீண்டும் நாம் செய்து வரும் நிலையில், அல்லாஹ்வையே ஏற்றுக் கொள்ளாத நிராகரிப்பாளர்கள் நம்மைப் புரிந்துகொண்டு சகிப்புத் தன்மையுடன் நடக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

    ReplyDelete
  3. நாம் முஸ்லிம் உம்மதிட்கஹா இறைவனிடம் பிராத்திப்போம

    ReplyDelete
  4. please read al quraan 96:9,10,11,12,13,14,15,16,17,18,19.

    ReplyDelete

Powered by Blogger.