Header Ads



பிலால் றயீஸின் 'சிறுவனின் பார்வையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு' (படங்கள் இணைப்பு)

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்

பிரபல வைத்திய நிபுணர் றயிஸ் முஸ்தபாவின் புத்திரர் பிலால் றயிஸ் எழுதிய 'சிறுவனின் பார்வையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு' (The Prophet Muhammad through The Eyes of a Child) எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை, 12 ஆம் திகதி கொழும்பு 7 இல் உள்ள ஜே.ஆர் ஜயவர்த்தன மண்டபத்தில் நடைபெற்றது.

ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரிக்கு நூலின் முதற்பிரதியை நூலாசிரியர் பிலால் றயிஸ் வழங்கினார். மௌலவி ஏ.எல்.எம்.இப்றாஹிம், ஓய்வுபெற்ற அதிபர் முஸ்தபா லெப்பை, மதீனா தேசிய பாடசாலை அதிபர் அஸ்ஸெய்க் எம்.ஜே.எம்.மன்ஸூர்(நளீமி) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

ஜாமியா நளீமியா கலாபீட பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, நூலாசிரியர் மாணவன் பிலால் றயிஸ் ஆகியோர்கள் உரையாற்றியதுடன் விசேட பேச்சாளராக கலந்து கொண்ட மதீனா தேசிய பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க எம்.ஜே.எம்.மன்ஸூர் குடும்ப உருவாக்கத்திற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் எனும் தலைப்பில் உரையாற்றினர். நிகழ்வுகளின் படங்களை இங்கே காணலாம்.














2 comments:

  1. masha allah.valarum payirai mulayil theriyum.

    ReplyDelete
  2. நூலை இதுவரை வாசிக்க கிடைக்கவில்லை.
    சிறுவனின் துணிகர முயற்சியை பாராட்டுவோம்.

    ReplyDelete

Powered by Blogger.