Header Ads



'பஷீர் கட்சிப் பதவியை இராஜினாமா செய்யட்டும்' - முஸ்லிம் அரசியல் மீட்பு முன்னணி

 
(முஸ்லிம் அரசியல் மீட்பு முன்னணியின் இந்த அறிக்கை குறித்து மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தை எமது இணையம் தொடர்புகொண்டு கருத்துக்கேட்க முயன்றபோதும் எமது முயற்சி வெற்றி பெறவில்லை)

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம்  ஆளுமைகளினாலும் வளர்தெடுக்கப்பட்ட இயக்கம். மக்களின் மாபெரும் தியாகங்களால் உருவாக்கப்பட்டது. அதற்காக பெறுமதி மிக்க உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. சொத்துக்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. வியர்வைகளும் இரத்தங்களும் சிந்தப்பட்டிருக்கின்றன.கட்சி எந்த பாதையில் செல்ல வேண்டுமென மக்கள் விரும்பி அதற்காக தியாகங்கள் புரிந்தார்களோ அந்த தியாகங்கள் மறக்கப்பட்டு கட்சியானது தனி நபர்களினது ஆசைகளையும், விருப்பங்களையும் நிறைவு செய்து கொடுப்பதற்கான ஒரு களமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது.

 இதன் வெளிப்பாடே அண்மையில் பசீர் சேகு தாவூத் ஏறாவூரில் முஸ்லிம் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிடுகின்ற அலி சாகிர் மௌலானாவுக்கு வாக்களிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தமையாகும் .
 
இந்த இடத்தில் இவ்விருவரினது கரங்களிலும் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களுக்கு எதிராக அவர்கள் கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்களின் இரத்தக் கறைகள் படிந்து கிடக்கின்றன என்பதை ஞாபகமூட்ட விரும்புகின்றோம். இதன் மூலம் மக்களின் தியாகங்களின் மூலம் கட்டி வளர்க்கப்பட்ட இந்த இயக்கம் இன்று எந்த நிலைக்கு சென்றுள்ளது? என்பதனை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

 பசீர் சேகு தாவூதின் உரையை அடுத்து மக்களிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்பலைகளையும்,கண்டனங்களையும் சற்றும் எதிர்பார்த்திராத அவர், இன்று தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்து ஒரு நாடகம் ஆடி இருக்கின்றார். அதன் மூலம் மக்களையும்,ஆதரவாளர்களையும் அமைதிப்படுத்த நினைக்கின்றார்.

மக்கள் கொதித்தெழுந்ததும், கண்டனக்குரல்கள் எழுப்பியதும் பசீர் சேகு தாவூத் அமைச்சுப் பதவி வகிக்கக்கூடாது என்பதற்காக அல்ல. மாறாக பசீர் சேகு தாவூத் என்ற ஒரு தனி நபர் தனது கட்சிப் பதவியை துஷ்பிரயோகம் செய்கின்றார், அதனை இந்தக் கட்சிக்கெதிராகவே பயன்படுத்துகின்றார் என்ற ஆத்திரமும்,விரக்தியுமே காரணமாகும்.

இந்தக் கட்சி யாரினதும் பரம்பரை சொத்து அல்ல.யாருடைய தயவிலும் தங்கியிருக்கின்ற இயக்கமும் அல்ல. யாரும் இந்தக் கட்சியை தங்களது சுய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு பகடைக்காயாகப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

 எனவே,பஷீர் சேகு தாவூத் அவர்கள் உடனடியாக கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்வதோடு, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலக வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இதுவே அவருக்கு சரியான குற்றப் பரிகாரமாக இருக்கும் என கருதுவதோடு எதிர்காலங்களில் இவ்வாறான துரோகத் தனங்கள் நிகழாமல் இந்தக் கட்சியை பாதுகாக்க உதவும் எனவும் கருதுகின்றோம்.
 

8 comments:

  1. Basheer was a good boy as long as he was praising Hakeem, but now he is a bad boy because he is criticising him.

    ReplyDelete
  2. Ranga's Minnal has a good topic to chew and taste.Minnal is the not the reflection of people's thought but Rang's

    ReplyDelete
  3. Arasiyalla ithellam satharanamappah................

    ReplyDelete
  4. explanation for his speech
    முதலில் அவர் சொல்ல வந்ததை புரிந்து விட்டு வந்து பேசுங்கள். முடிந்தால் உங்கள் மனதையும் காதுகளையும் திறந்துவிட்டு மீண்டும் ஒரு முறை அவர் பேச்சை கேளுங்கள். எந்த ஒரு சுய நினைவுள்ள மனிதனும் தனது மரியாதைக்கு பங்கம் வரும் வகையில் எதையும் பேச மாட்டான். பஷீர் சேகுதாவூத் அவர்களுக்கும் தெரியும் தன் எதிர் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க சொன்னால் தன் கட்சி ஆதரவாளர்கள் மட்டும்மல்லாது உலகமே அவரை பிழையாக பேசும் என்று. அவர் சொன்னது இது தான் ' முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அதுல் உள்ள வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் , எவர்கள் எல்லாம் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களோ அவர்கள் ஒரு வாக்கையேனும் மௌலானாவிற்கு போடுங்கள்.' ( சுதந்திர முன்னணியில் போட்டிடும் மற்ற வேட்பாளர்களுக்கு போடா இருக்கும் வாகுகளில் ஒன்றை அதாவது 3 இல் 1 ஐ ) பஷீரின் உல் மனதில் இருந்தது ஊர் ஒன்றுபட்டும் என்பது தானே தவிர வேற எந்த எண்ணமும் அல்ல. முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அனைவரும் சென்று மௌலானாவிற்கு வாகல்யுங்கள் என்று கூறவில்லை. எந்த மடையனும் அப்படி கூறவும் மாட்டான். ஊர் ஒண்டு சேர்ந்து 2 உறுப்பினர்களை வென்று எடுப்போம். அது நம் சமூகத்துக்கு தான் நல்லது எண்டு தான் அவர் எண்ணி இருந்தார். எப்பொழுதும் உங்கள் பார்வையில் பிழைகளை வேய்துகொண்டு மற்றவரை குடம் சொல்ல வேண்டாம். அவர் கூர்யியது 2 தரபினர்களுக்கு விளங்காமல் இருக்கலாம் 1 அடி முட்டாள்கள் 2 அவரை பிடிக்காதவர்கள். நீங்கள் எந்த வகைக்குள் உள்ளடங்குவீர்கள் என்பதை நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள். வார்த்தைகளாலும் மொழிகளாலும் மனிதர்களுக்கு புரிய வைப்பது மிகவும் கடினமானது. ( நடவடிக்கைகளில் கூட ) உதாரணமாக இருங்க வாறன் என்பது இரண்டு அர்த்தங்களை கொண்டது, போய்விட்டு திரும்பி உடனே வருவது , போவது. அதை புரிந்துகொல்பவர்களில் தான் உள்ளது. அதே போல் தான் மனதில் அப்பழுக்கு இன்றி பஷீர் கூறியதை புரிந்துகொள்பவர்கள் கையில் தான் உள்ளது. எப்பொழுதும் மேலாக பார்த்து முடிவுக்கு வந்து விடாதீர்கள். ஒரு பக்கம் மட்டுமே யோசிக்காதீர்கள். இப்படியும் இருக்கலாம் தானே எண்டு மற்ற பக்கமும் யோசித்து விட்டு பேசுங்கள். வார்த்தைகள் ரொம்பவே பலம் வாய்ந்தது. ஒரு கண்ணால் பார்த்தால் எல்லாம் தவறாக தான் தெரியும். மனைவி மரக்கறி காரனுடன் பேசினாலும் கள்ளத்தொடர்பு இருக்கோ எண்டு தான் மனம் சொல்லும்.

    ReplyDelete
  5. அரசியல் சதுரங்க காய் நகர்த்துதலில் இவர் மட்டும் விதிவிலக்கல்ல ஐவரும் அவரைப்போலவே செய்துள்ளார் இதில் யாரையும் யார் நொந்து பிரயோசனம் இல்லை ஜனநாயகம் அரசியல் வாதிகளுக்குகுத் தெரிந்தால் இப்படி இலங்கை இருக்காது

    ReplyDelete
  6. சாகிப் ஹசன் ஊர் ஒத்துமை என்ட கோசத்துக்குள்ளதான் அவருட அரசியால் லாபம் ஒளிஞ்சி கிடக்கு. அதுக்காக அவர் பேசினத அவர்ட பாணியிலேயே பட்டர் பூசி மழுப்ப வாணாம். முஸ்லிம் காங்கிரஸ் ஏறாவூரில இருக்கிற பசீர்-மௌலானா சண்டைய ஒழிக்கிறதுக்கு உருவாக்கினதில்ல. முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் அரசியல் உரிமைகள வென்றெடுக்க உருவாக்கப்பட்டது.இது அவங்க ரெண்டு பேருக்குமே விளங்காது.ஏனென்டா அவங்க ரெண்டு பேருமே ஆரம்பத்தில முஸ்லிம் காங்கிரச குழி தோண்டிப் புதைக்க ஒற்றுமையா நிண்ட ஆக்கள்தான். இப்ப அவன்குட வாசிக்காக கட்சிய யூஸ் பண்ண பாக்காங்க.

    முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர்ட பணி தேர்தல் காலத்தில மாற்றுக் கட்சிக் காரர்களையும் எப்படி தங்கட கட்சிப் பக்கம் எடுக்கலாம் எண்டு வேலை செய்யணுமே தவிர வெற்றிலைக்கு வோட்டு போடுற ஆட்கள் மௌலானாவுக்கு வோட்டு போடுங்க எண்டு சொல்வது அல்ல. அத சொல்றதுக்கு அங்க ஆட்கள் இருக்காங்க. இவர வேணுமெண்டா தவிசாளர் பதவிய இராஜினாமா செய்து போட்டு அவங்களுக்கு வேலை செய்ய சொல்லுங்க.அதுக்கு எங்கட கட்சியின் தவிசாளர் பதவிய பயன்படுத்த வேணாம்.

    ReplyDelete
  7. வெற்றிலைக்கு போடுபவர்கள் மௌலனாவுக்கும் போடுங்கள் என்றால் தளும்பல் நிலையில் உள்ள மு கா ஆதரவாளன் நமது தவிசாளர் மௌலனாவை விரும்புகிறார். அதனால் அவருக்கே போடுவோம் என்றே தீர்மாநிப்பான். இதுதான் யதார்த்தம்

    ReplyDelete

Powered by Blogger.