Header Ads



தொழுகை நடாத்தக்கூட அஞ்சுகின்ற காலம் இது - ஆட்சியாளர்கள் வேடிக்கை - ஹக்கீம் சீற்றம்



டாக்டர் ஹபீஸ்

மதவழிபாட்டுச் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் கேவலமான செயல்களை சுட்டிக்காட்டப்போனால் நாங்கள் நையாண்டி செய்யப்படுகின்றோம்.  ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவரும்  நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடிப் பிரதேசததில் மாவடிச்சேனையில் கட்சியின் கிளையொன்றை வியாழக்கிழமை (02) திறந்து வைத்து உரையாற்றும் பொழுது இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் பஸீர் சேகுதாவூத், பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹம்மட், கிழக்கு மாகாண சபை வேட்பாளர்களான இஸ்மாயில் ஹாஜியார், ஜவாஹிர் சாலி, சட்டத்தரணி ராஸிக், கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஹனிபா ஹாஜியார் ஆகியோர் உட்பட கட்சி முக்கியஸ்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலின் ஊடாக அரசியலில் அதிமுக்கிய திருப்பு முனையொன்றை சந்திக்கப்போகின்றது. பல கட்சிகள் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில தனித்துப் போட்டியிடுவதற்கு தீர்மானித்ததை பலரும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெரிதும் சிலாகித்துப் பேசுகின்றனர்.

கட்சிப் போராளிகள் மரச்சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். அரசாங்கத்தில் மு.கா. இணைந்து செயற்பட்டால் தமக்கு இடமில்லாமல் போகும் என்ற காரணத்தினால் இடது சாரிக்கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒரு கிழமைக்கு முன்னரே கூறினார்கள். அரசாங்கத்தோடு மு.கா. சேர்ந்து கேட்டால் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைந்து விடும் மு.கா. வை வெளியே போட்டால் தாம் வெற்றியடைந்து விடலாம் என்ற நப்பாசையுடனும் சிலர் இருந்தனர்.

மு.கா. அரசோடு இருந்தாலும் அரசக்கு வெளியில் இருந்தாலும் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை தீர்மானிக்கின்ற கட்சி மு.காங்கிரஸ்தான் என்பதை எமது கட்சிப் போராளிகள் புரிந்து கொண்டிருந்தார்கள். அமைச்சர்களாக இருந்தால்தான் கட்சி நடத்தலாம் என்ற தேவை மு.காவுக்கு கிடையாது என்பதை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான பஸில் ராஜபக்ச, மைத்திரி பால சிரிசேன, சுசில் பிரமஜெயந்த, டளஸ் அழகப்பெறும போன்றவர்களுக்கு தெளிவாக குறிப்பிட்டேன்.

மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த ஹாபிஸ் நஸீர் அஹமத்தை அடையாளப்படுத்தியுள்ளோம். மூன்று ஆசனம் அல்லது அதற்கு மேல் வெற்றி பெறுவது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். ஆனால இந்த வெற்றி இலக்கை அடைவதற்கு முதன்மை வேட்பாளருக்கான ஆலோகனைகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராகவுள்ளோம் என்பதை அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

மாறிவரும் அரசியலுக்கு ஏற்ப நாங்களும் இயங்க வேண்டும். இன்று அரபுலக வசந்தம் மமதை பிடித்த ஆட்சியாளருக்கு எதிராக பாரிய மக்கள் எழுச்சிகளை ஏற்படுத்தி வருகின்றது. அதே மாதிரியான ஒரு எழுச்சியை கிழக்கு மண்ணில் மக்கள் செய்து காட்டி ஆட்சியாளர்களை உணரச் செய்வதற்கு மரச்சின்னத்தை இன்று நாம் உங்கள் முன் கொண்டு வந்து வைத்துள்ளோம். மட்டக்களப்பில் அரபுலக வசந்தத்திற்கு ஒத்த ஒரு போராட்டத்தை இந்த வேட்பாளர்கள் ஊடாக செய்து காட்ட வேண்டும் என்ற பொருப்பை ஒப்படைத்துள்ளோம்.
 
குக்கிராமங்களில் கூட ஒரு வீட்டுக்குள் அருகிலுள்ளவர்கள் ஒன்றுகூடி கூட்டாக தொழுகை நடாத்தக் கூட அஞ்சுகின்ற காலமிது. மதவெறியர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றார்கள். இத்தகைய கேவலமான இழிசெயலை நாட்டில் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஆட்சித் தலைவரும், பாதுகாப்புச் செயலாளரும் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதால் மக்களின் மனவேதனை மேலும் அதிகரிக்கின்றது.

இவ்வாறான மதவழிபாட்டுச் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் கேவலமான செயல்களை சுட்டிக்காட்டப்போனால் நாங்கள் நையாண்டி செய்யப்படுகின்றோம். இவ்வாறான காரியங்களை கண்டிப்பதற்கும், எமது உரிமைக் குரலை உயர்த்துவதற்கும் எமது பேரம் பேசும் சக்தியை அதிகரித்து அரசியல் பலத்தை மேலும் சிறப்பாக வெளிக்காட்டுவதற்கு குறிபப்பாக கிழக்கு மண்ணில் எமது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பிரதியமைச்சர் முதன்மை வேட்பாளர் ஹாபிஸ் நஸீர் அஹமத், ஏனைய வேட்பாளரான இஸ்மாயில் ஹாஜியார், ஜவாஹிர் சாலி, சட்டத்தரணி ராசிக் ஆகியோரும் உரையாற்றினர்.

10 comments:

  1. இது என்னது எப்பவோ இதுபோல கேட்டது போலத்தெரிகின்றது. அதன் பிறகு சத்தமில்லாமல் இருந்துவிட்டு இப்போது சத்தம் கேட்கின்றது. ஆஆ தேர்தலாக்கும். தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினையில் தாறுமாறாக பேசிவிட்டு பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டு இப்போது கொஞ்சம் தலை தெரிகின்றது என்ன?

    வெற்றிலைச் சின்னத்தில்தான் கேட்பதற்கு எத்தனை முறையோ உங்களது மசூரா சபையைக் கூட்டி கூட்டி முடியாமல் போனபோதுதான் தனித்துக் கேட்பதற்கு முடிவு எடுத்தீர்கள். அதற்கெல்லாம் காரணம் வேற.

    ReplyDelete
  2. இப்படியாக முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதிகள் சம்பந்தமாக பாராளுமன்றில் பேசுங்களேன் அதை விட்டு விட்டு மக்களின் வோட்டை பெறுவதற்காக மக்களிடம் பேசி பிரயோசனமில்லை. தயவு செய்து இதனை பாராளுமன்றில் பேசுங்கள்.

    ReplyDelete
  3. ஏன் இவைகளுக்கு எதிராக உங்கள் கருப்பங்கியைஅணிந்து நீதி மன்றம் நாட தயக்கம் நீதி அமைசரே மக்கள் முன் வந்து புலம்புவதைவிட அதனை நீதியின் துணைகொண்டு தடுக்கும் ஆற்றல் உங்களிடம் உன்டல்லவா??? ஆக பிரச்சினைக்கி முடிவுகட்ட நீதிமன்றம் நாடாமல் இருக்க உஅந்த பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் என்னத்தைதவிர வேரேதும் இருந்தால் அதனையும் மக்கள் முன் வைத்து மக்களின் சந்தேகங்களை போக்களாமே?

    ReplyDelete
  4. good joke...you are also member of ruler. this is called same side goal in a soccer..i dont know how do call it in politics?

    ReplyDelete
  5. தேர்தல் காலம் வந்தாமட்டும் தான் உங்கட சத்தம் கொஞ்சம் வெளியே வருது.... இந்த பள்ளிவாசல் விடயங்கள் பற்றி நீங்கள் பாராளுமன்ரத்தில் பேசுவதற்க்கு தயக்கம் காட்டுவதேன்.. நீதியமைச்சர் அவர்களே ..? ? உங்கள் பதவி பறிக்கப்பட்டு விடும் என அஞ்சுகிறீர்களா? ?

    ReplyDelete
  6. Itharkku mayankupawarkalum vaalpidippavarkalum pathavi mogam iruppawarkal irukkum varai ivarkal kudumba penkalayum alaiththu vanthu ippadi haramaana meettingkukalil niruththi vodduppoda sammathikkinraarkal

    ReplyDelete
  7. he is continually cheating our muslim community after the death of marhoom ashroff. twelve years he did nothing 0 ? ? again an other twelve years sure................. pleas do not vast our vote to the SLMC we have good sense.
    Therefore we have to choice NATIONAL CONGRESS MEMBER THIS TIME YOU GO AND SLEEP THIS TIME WE WILL HAVE TO GATHER ALL EASTERN PROVINCE MUSLIM TO ATHAULLA AND RISAD BATHIUDEEN PARTY. YOU LOOK TO THE BOTH DISTRICT WHAT IS GOING ON FANTASTIC.

    ReplyDelete
  8. மேடைஇல் அலறுவதை விட பள்ளி வாசல்கள் தாக்கப் படுவதை நீதி மன்றம் கொண்டு சென்றால் நல்லது . நீதி பதிகளின் தீர்ப்பு எப்படி என்றும் பார்க்கலாம்

    ReplyDelete
  9. கூத்தமைப்பின் ஊதுகுழலாகவே செயற்படும் நமது நீதி அமைச்சருக்கு முஸ்லிம் மக்கள் என்ன பாடுபட்டாலென்ன? அவருக்கு ஒன்றும் உரைக்காது.

    கூத்தமைப்பின் நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப, நடனமாடுகிறார். அஷ்ரபின் மறைவிற்குப் பிறகு, இவர் முஸ்லிம்களுக்கு என்ன செய்தார்?

    தயவு செய்து, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நமது நீதி அமைச்சர் விலகி விடுவது நல்லது.

    ஐ.தே.கட்சிக்கு ஒரு ரணில் போல, முஸ்லிம் காங்கிரசிற்கு ஒரு ரவூப் ரகீம். வெறும் புண்ணாக்குகள்.

    ReplyDelete
  10. yes i totally agree with most of the comment here, he should go to high court to get a arrest warrant agains budhist monks who are trying to destroy mosque, we sholud get this matter in to court

    ReplyDelete

Powered by Blogger.