Header Ads



அமெரிக்காவின் நிதியில் இஸ்ரேல் ஏவுகணை பரிசோதனை



ஈரானுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் இஸ்ரேல் தனது ஏவுகணை வரிசையை விரிவுபடுத்தியுள்ளது.

மத்திய ரக ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கும் "ஏரோ-2' ஏவுகணையை இஸ்ரேல் மேலும் மேம்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் மத்திய தூர ஏவுகணைகளான "சஹாப்', "செஜில்', சிரியாவின் "ஸ்கட் டிஎஸ்' ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கும் திறனுடையதாக "ஏரோ-2' மேம்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் இருந்து வெளியாகும் "ஜெருசலேம் போஸ்ட்' பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

வரும் மாதங்களில் "ஏரோ-3' எனும் புதிய இடைமறித்துத் தாக்கும் ஏவுகணையை முதன் முறையாக பரிசோதித்துப் பார்க்க, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இஸ்ரேலின் முதல் தலைமுறை ஏவுகணை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு 80 சதவீத நிதியுதவி அமெரிக்காவால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.