அரசுக்கு ஒத்து ஊதுபவர்களால் முஸ்லிம்கள் தொடர்பாக வாய் திறக்க முடியாது - எ.எம்.ஜெமீல்
அபு ஆதில்
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெற உள்ள மாகாண சபைத்தேர்தலானது எங்களது ஒற்றுமையை இந்த நாட்டுக்கும் ஏன் சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டும் ஒரு முக்கிய தேர்தலாகும். முஸ்லீம்கள் இந்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாரிய அளவில் இம்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சூழலில் நமது நாட்டில் எங்களது மதச்சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. பூட்டுகள் போடப்படுகின்றன சுதந்திரமாக எங்களது மதக்கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
கடந்த சாய்ந்தமருது போலிவேரியன் வீட்டுத்திட்டத்திற்கு முன்பாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற முஸ்லீம் காங்கிரஸின் பிரச்சார கூட்டத்தில் முஸ்லீம் காங்கிரஸின் சார்பில் எ.எம்.ஜெமீல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாண சபையின் தேர்தல் முடிவுகளை முழு உலகமும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றது. ஒருபுறத்தில் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குங்கள் என சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகித்து வரும் இவ்வேளையில் தமிழர்களுக்கு எதாவது வழங்கியே ஆகவேண்டும் என்ற நெருக்கத்துக்குள் அரசு தள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஏதாவது தீர்வு ஒன்றை தமிழர்களுக்கு வழங்கும் போது முஸ்லீம்களுக்கான பங்கை பெறுவது என்பது முஸ்லீம் தலைமைத்துவங்கள் மீது சாட்டப்பட்டுள்ள மிகப்பிரதானமான கடமையாகும். இதற்க்கு பொருத்தமான முஸ்லீம் நிறுவனம் என்றால் அது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தான். எனவே நாங்கள் முஸ்லீம் காங்கிரசை பலப்படுத்த வேண்டியது எங்களது தலையாய கடமையாகும். என்று கூறினார்.
முஸ்லீம் காங்கிரசுக்கு சாய்ந்தமருது மக்கள் 95வீதமான வாக்குகளை வழங்கி வருவதாகவும் அதனை 100வீதமாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த மாநகர சபைத்தேர்தலின் போது கட்சி அரசியல் நோக்கம் கருதி தான் பொதுவாக செயற்பட்டதாகவும் ஊரின் பிரதிநிதித்துவத்தை காப்பதற்காக தன்னுடன் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களும் இணைந்து செயற்படுவதை இட்டு மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் சாய்ந்தமருதின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தன்னுடன் மக்கள் அணியணியாக இணைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ் தீவிர வாதிகளின் பிடியில் இருந்து நமது சமூகத்தை நிறுவன ரீதியாக பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்ட முஸ்லீம் காங்கிரஸ் தற்போது சிங்கள தீவிர வாதிகளிடம் இருந்து முஸ்லீம்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. அரசாங்கத்துடன் ஓட்டிக்கொண்டு அரசுக்கு ஒத்து ஊதுபவர்களால் நிட்சயமாக நமது சமூகம் தொடர்பாக வாய் திறக்க முடியாது இதனை தற்போது நாடுபுராயும் நமது பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது வாய் மூடி மௌனிகளாக இருந்து கொண்டு பள்ளிவாசல்களுக்கு எதுவுமே நடைபெறவில்லை என்று அவர்கள் கூறுவதில் இருந்து நாங்கள் அறிந்து கொள்ளலாம். என்று கூறினார்.
மறைந்த தலைவர் இந்த முஸ்லீம் இயக்கத்தை இந்தபிரதேச நலனுக்காக மட்டும் ஆரம்பிக்கவில்லை என்றும் முஸ்லீம்களுக்காக நாட்டில் உள்ள முஸ்லீம்களுக்காகவும் ஏன் சர்வதேசத்திலும் உள்ள முஸ்லீம்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய முறையில் இந்த முஸ்லீம் காங்கிரசை உருவாக்கினார். அன்றிருந்த தலைவரை விட தற்போதுள்ள தலைவர் பாரிய சவால்களை எதிர்நோக்கிவருவதாகவும் இந்த சவால்களை முறியடிப்பதற்கு நாங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மறைந்த தலைவர் 2012ம் ஆண்டு அரசியல் ரீதியில் பாரிய எழுச்சி ஏற்படும் என எதிர்வு கூறி இருந்தார். அந்த எழுச்சி இந்த சாய்ந்தமருதில் இருந்து ஆரம்பித்துள்ளது அதுதான் மக்கள் தற்போது அணியணியாக முஸ்லீம் காங்கிரஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து வருவதாகவும் உரையாற்றினார்.
கிழக்கு மாகாண சபையில் 37 ஆசனங்கள் இருப்பதாகவும் அதில் 19 ஆசனத்துக்கு மேல் ஆசனங்களை பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும் என்றும் தற்போதைய சூழலில் இந்த அரசு 12ஆசனங்களுக்கு மேல் பெறமுடியாது என்றும் யார் ஆட்சி அமைப்பது என்றாலும் முஸ்லீம் காங்கிரசி தயவில்லாமல் ஆட்சி அமைக்கமுடியாது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த மாகாண சபை காலத்தில் தங்களால் பாரிய அபிவிருத்திகளை செய்யாவிட்டாலும் நமது சமூகத்துக்கு எதிராக இரவோடுடிரவாக கொண்டுவரப்பட்ட பல சட்ட மூலம்களை தடுத்துள்ளோம். இதன்காரணமாக நமது சமூகம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லீம்கள் இம்சிக்கப்படுவது போன்று பர்மாவில் உள்ள முஸ்லீம்கள் அங்குள்ள பௌத்த தீவிரவாதிகளால் அட்டூளியப்படுத்தப்படுகின்றார்கள் இதைப்போன்ற நிலைமை எமது மீதும் திணிக்கப்படுவதர்க்கு முன்னர் எங்களை நிறுவன ரீதியாக ஒற்றுமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்ட இந்நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் மாநகர பிதா சிராஸ் மீராசாஹிப்,தேசிய மக்கள் காங்கிரசில் அம்மாரை மாவட்ட அமைப்பாளராக இருந்து முஸ்லீம் காங்கிரசில் அண்மையில் இணைந்து தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பொருளாளராக இருக்கும் யஹ்யா கான் மற்றும் அதீதிகளும் கலந்து உரையாற்றினர்.



போத்தாதங்கோ, போத்தாதங்கோ.
ReplyDeleteபோத்துறது நல்ல பழக்கம் இல்ல.