Header Ads



நாச்சியாதீவு பள்ளிவாசல் நிர்வாக சபையின் விளக்கம்


'முஸ்லிம் சமாதான நீதவானை புத்தரை வழிபடவைத்த பொலிஸ் அதிகாரி' என தலைப்பிட்டு சில செய்திகள் வெளியாகியிருந்தன. இதுதொடர்பில்  நாச்சியாதீவு பள்ளி  பரிபாலன சபை தலைவர் எஸ்.எச்.இஸ்மாயில் மற்றும் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோர் எமது இணையத்திற்கு குறிப்பொன்றை அனுப்பியிருந்தனர்.

இதுதொடர்பில் எமது இணையம் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியபோது அவர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கு சுருக்கமாக தருகிறோம்.

இந்த சம்பவத்தின் தொடர்புடைய விடயங்கள் குறித்து நாங்கள் பூரணமாக அறிவோம். முஸ்லிம் மக்களுடன் மிக அன்யோன்யமாக இருக்கும் முஸ்லிம்களை மதிக்கின்ற ஹிடோகம நிலைய பொறுபதிகாரி பற்றி பிழையான தகவல் வெளியாகியுள்ளது. பிரதேசத்தில் பல குற்றச்செயல்களை நிறுத்திக்காட்டிய பெருமை இவரையே சாரும்.

குறிப்பிட்ட ஜுனைதீன் என்பவர் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர் அவர் ஒரு சமாதான நீதவான் இல்லை. அவரது பரம்பரைத் தொழிலே மாடுகள் வாங்குவதும் விற்பதும்தான் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.



No comments

Powered by Blogger.