Header Ads



சிரியா விவகாரத்தில் ஈரான் தலையிடுவது அழிவுக்கு வழிவகுக்கும் - அமெரிக்கா எச்சரிக்கை



   சிரியா பிரச்னையில் ஈரான் தலையிடுவது என்பது ஆக்கப்பூர்வமானதாக இருக்காது மாறாக அழிவுக்கே வழிவகுக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

  சிரியா பிரச்னையில் மத்தியஸ்தராகச் செயல்படத் தயார் என ஈரான் அறிவித்திருந்தது. ஆனால், ஈரானின் செயல்பாடு சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் சிரியா அதிபர் அஸôதின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவே அமையும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  கலிபோர்னியா மாகாணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானப் பயணத்தின் போது, உடன் பயணம் செய்த செய்தியாளர்களிடம் வெள்ளை மாளிகை செய்தித்துறைச் செயலர் ஜே கார்னி இது குறித்து கூறியது,

  சிரியா பிரச்னையில் ஈரான் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் என்பதற்கு ஆதாரங்கள் எதுவுமில்லை. சொந்த நாட்டு மக்களையே கொடூரமாகக் கொலை செய்யும் சிரியா அதிபர் அஸôதின் செயல்களுக்கு ஊக்கமளிப்பதாகவே அமையும் என்றார்.

  அரசின் செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரெல் செய்தியாளர்களிடம் கூறியது,

  ஈரானின் சிரியா தொடர்பான நடவடிக்கைகள் அழிவை ஏற்படுத்துவதாக இருக்கும் எனக் கருதுகிறோம். 

 அஸôதை தொடர்ந்து ஆட்சியில் தக்கவைக்கும் முயற்சியாகவே அது இருக்கும். மக்கள் அடக்கி ஒடுக்கப்படும் இந்நிலை நீடிக்கும். அரசியல் ரீதியான தீர்வை மட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இருக்கும்.

  சிரியா வன்முறைக்கு வெள்ளிக்கிழமை 78 பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை 162 பேர் உயிரிழந்துள்ளனர். 

 அரசு மனசாட்சியற்ற முறையில் மக்கள் மீது, வான்வெளி மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி வருகிறது. மனிதாபிமான உதவிகளை முடக்கியதுடன், மருத்துவமனைகளையும் அரசு மூடி வருகிறது.

  அரச எதிர்ப்புப் படையினர் வலுப்பெற்று வருகின்றனர். நாட்டின் வடக்குப்பகுதியில் பெரும்பான்மைப் பிரதேசங்களை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றார் பாட்ரிக் வென்ட்ரெல்

No comments

Powered by Blogger.