ராஜகிரியவில் ஜாமிஉத் தாருல் இஸ்லாம் என்ற பள்ளிவாசல் கிடையாதாம்..!
தாஹா முஸம்மில்
அன்பர்களே..!
நான் இங்கு ஒபேசேகரபுரவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றேன். கடந்த சில தினங்களாக இங்கு ஜாமிஉத் தாருல் இஸ்லாம் என்ற பள்ளிவாசலில் தொழுகைக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
உண்மை என்னவெனில் ஒபேசேகரபுர கறீடா பிட்டிய வீதியில் அமைந்துள்ள A-Won Educational Institute இல் ரமழான் மாத தராவீஹ் தொழுகை பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆரம்ப சில தினங்களில் எந்த பிரச்சினையுமின்றி தொழுகை இடம்பெற்றது. கடந்த 29ம் திகதி கோட்டே நகர பிதாவால் பிரதேச மக்களுக்கிடையே நல்லிணக்கம் கருதி அருகிலுள்ள வரவேற்பு மண்டபத்தில் ஓர் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இப்தாரைத் தொடர்ந்து குறிப்பிட்ட Institute இல் வழமைக்கு மாற்றமாக ஆண்களும் வந்து குவிந்ததால் பிரதேச வாசிகளாலும் சூழவுள்ள பௌத்த மத ஆலய குருக்களாலும் தொழுகைக்கு தடங்கள் ஏற்படுத்தப்பட்டது உண்மைதான்.
எனினும் செய்தியில் குறிப்பிடப்படுவது போல் ஐமிஉத் தாருல் ஈமான் என்ற ஒரு பள்ளிவாசல் இங்கு இதுவரை கிடையாது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆகவே, இந்தப் புணித ரமழான் மாதத்தில் புரளிகளைக் கிளப்பி வீன் பிரச்சினைகளை உருவாக்கவேண்டாம் என்று மிக அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.

யார் இந்த செய்தியை வளங்கினார்கள் என்று சரியாக குறிப்பிடவில்லை. அப்படி செய்தி சொல்வது உண்மை என்றால் நீங்கள் பிரசுரித்த செய்திகளின் நிலைமை என்ன ??????????????????????????? பதில் அவசியம்
ReplyDeleteMR WHAT DO YOU MEAN OF THIS MESSAGES THIS HAPPENED A WEEK AGO AMUTHURU EEN KOORINNAN PALLIYAI ORU NAALUKKU MADDUM POODDUNKAL ? APPO ELLORA UNKALAITH THAVIRA THALAI SARIYALLATHA POI MUDDALKALAA? APPO WAQFF SAFAFAI ADITHU KOORIYULLATHU RESISTED MAID ENRU. ITHUTHAAN PARUNKO TAWALAI THANNALETHAAN KEDDATHU. KALVANANGIKKUM ALLAHWAI NIRAKARIPORUKKUM ALLAN MALAKKUMAAR SERNTHU IFTHAAR BARAKATHU IRANGUM THARWAAYIL KAAFIKALUKKU NALLENNA ADIPPADAI IFTHAAR KODUTHTU ALLAHVAI KOFAMOODDIYULLEERKAL ITHU ULAKIL SRI LANKA VILLA MADDUM THAN NADAKKUTHU
ReplyDeleteமுஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி ஆசிரியருமான மதிப்பிற்குரிய N.M.அமீன் அவர்களே, இது உங்கள் கவனத்திற்கு.
ReplyDeleteஎங்களுக்கு தெளிவு வழங்குங்கள்.
ஆண்கள் வந்தது கும்மாளம் அடிக்கவா? தொழத்தானே. அதற்கு ஏன் இடைஞ்சல். நாங்கள் வீதியிலும் தொழலாம் அப்போது என்ன செய்வார்களாம் எல்லாம் இனவாதம்தான். -முபாறக்
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மையானால் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக
ReplyDeletesome one need to go to mosque and pray to identify the mosque in his surroundings
ReplyDeleteநானும் சுமார் 5 வருடங்களாக இந்த பிரதேசத்தில் இருக்கிறேன் அத்துடன் இப்படி ஒரு பள்ளி கட்டப்பட்டதில் இருந்து இன்று நடக்கும் பிரச்சினை வரை அறிந்தவன் என்ற அடிப்படயில் இவர் சுன்ன பெயர் மாற்றதிக்கே காரணம் இங்கே தொழ முடியாமை தான் மட்ட படி இவர் சொல்லுவது போல் பள்ளி இல்லாமல் இல்லை. நண்பரே நீங்கள் எங்கு இருந்து கொண்டு எழுட்திகீர்களோ எனக்கு தெரியாது but தயவு செய்து பள்ளி ஒன்று இல்லை அன்று மட்டும் சொல்ல வேணாம். நன்றி
ReplyDeletemr. thaha muzamil, you have got wrong information, you know the place so, please come to any prayers( if its 'tharaweeh' most welcome)and get the right think
ReplyDeletewhts going on here, who is correct and who is wrong, we need the truth news, jaffna news can u pls confirm this
ReplyDeleteஎன்னப்பா ஒரே குழப்பமாக இருக்கு ? ? ? 25 வருடமாக வாழ்ந்தவர் இல்லை ! ! என்கின்றார் 5 வருடமாக வாழ்பவர் உண்டு என்கின்றார் ! !
ReplyDeleteயாருடைய பேச்சைக் கேட்பது ? ?
இப்படி இரண்டுகேட்டான செய்திகளை வெளியிடும் jaffnamuslim.com ண் நிலை என்னா ? எப்படி உங்கள் உண்மை தன்மையை நாங்கள் விளங்கி கொள்வது ?
Above news item is totally misleading, these are the mosque details:
ReplyDeleteReg. No. R/1995/C/184,
Name: JAMIU DARUL IMAN
Type: M
Address: GROUND ROAD, OBEYSEKARAPURA , RAJAGIRIYA.
For further details please visit Department of Muslim Religious and Cultural Affairs website’s following link:
http://www.muslimaffairs.gov.lk/islamic_institutions/mosque_district/colombo.php
I’m a resident of Obeysekarapura, I know there is a mosque in this area. What is the motive behind this incorrect news item???
ReplyDeleteசகோதரர் Yo Yo அவர்களே,
ReplyDeleteசரியான தகவலை உரிய முறைப்படி முன்வைத்து, வீணாக உருவாக்கப் பட்ட குழப்பத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
நீங்கள் வழங்கிய, இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தள இணைப்பில், பதிவு செய்யப் பட்ட கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் வரிசையில், மேற்படி ஜாமிய்யு தாருல் ஈமான் பள்ளிவாசல் 109 ஆவது பள்ளிவசலாக் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாஹா முஸம்மில் அவர்களே,
விஷயம் தெரிந்து வேண்டுமென்றோ, அல்லது விஷயம் தெரியாமல் அலட்சியமாகவோ முஸ்லிம்களை குழப்பத்திற்கு உள்ளாக்கிய நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
ஒரு விடயம் ஒழுங்காகத் தெரியாத நிலையில், தீர விசாரிக்காமல் பொய்யான தகவலைப் பரப்புவதும் குற்றம், அதே போல உண்மை தெரிந்திருந்தும் அதனை மறைத்து, வேண்டுமென்றே பொய்யைப் பரப்புவதும் குற்றம். நிச்சயமாக நீங்கள் இவ்விரண்டில் ஒன்றை செய்துள்ளீர்கள். உங்கள் நோக்கத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான்.
யாழ் முஸ்லிம் இணையத் தளமே,
மேற்படி செய்தியை முற்றாக நீக்குவதுடன், மறுப்புச் செய்தி ஒன்றியம் உடனடியாக வெளியிடவும்.
மேற்படி செய்தி Facebook மூலம் share செயப்பட்டுள்ள நிலையும் காணப்படுகின்றது, அதற்கான காரணம் யாழ் முஸ்லிமின் நம்பகத் தன்மையே தவிர, செய்தியை வழங்கியவர் பற்றிய அறிமுகம் அல்ல. ஆகவே மறுப்பை தெளிவாக வெளியிட வேண்டிய பொறுப்பும் உங்களையே சாரும்.
Dear Javith,I know prayers are taking place not only in this place but in several other places in around the area during this Holy month of Ramadhan. It is not the point here. You have to establish whether it's a Masjid. You can't call an institute or an academy a Masjid.
ReplyDeleteDear Yo Yo
ReplyDeleteRegistering a as such and such is not very important. Whether it functioned as such is what matters. For example anyone can register a business or any amount business for that matter at one's residential address but you will never call it a business place until you really start one. A musjid is not a secret hide-out; it's a public place. If the area residents are unaware of such a place how can you call it a Musjid....?
மௌலவி முபாரக்கின் கருத்து சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. நீங்கள் வீதியிலும் தொழலாம் வீட்டிலும் தொழலாம். இங்கு பிரச்சினை அதுவல்ல. குறிப்பிட்ட இடத்தில் பள்ளிவாசல் ஒன்று அமையப்பெற்றிருந்ததா என்பதுதான்.
ReplyDeleteThaha Muzammil,
ReplyDeleteமீண்டும் மீண்டும் சிறுபிள்ளைத்தனமாக கருத்துப் பதிவதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
பள்ளிவாசல் ஒன்று இருந்த காரணத்தால் தான், அது பதிவு செய்யப் பட்டு, தொழுகையும் நடைபெற்றுள்ளது. தொழுகை நடைபெற்ற காரணத்தினால்தான் பெளத்த இனவாதிகள் தொழுகையை நிறுத்தும் படி குழப்பம் விளைவித்துள்ளனர்.
நீங்கள் சொல்லுவது போல அது ஒரு institute மட்டும்தான் என்றால், போலீசார் எதற்காக அங்கே பாதுகாப்பு வழங்க வேண்டும்? மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்த மஸ்ஜித் மீண்டும் திறக்கப் பட முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் N.M. அமீன் ஏன் குரல் கொடுக்க வேண்டும்? ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் மவ்லவி தாஸிம் அவர்கள் எதற்காக அங்கே மீண்டும் தொழுகையை ஆரம்பித்து வைக்க வேண்டும்?
உங்கள் அறியாமைய ஏற்றுக் கொண்டு, ஒதுங்கி விடுவதுதான் சிறந்தது.
தொடர்ந்தும் பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.