Header Ads



பள்ளிவாசல்களில் சுதந்திரமாக வழிபடும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது - மஹிந்த ராஜபக்ஸ


TN

ஜயஸ்ரீ மஹாபோதி விகாரை, தலதாமாளிகை, மடுதேவாலயம், காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் இப்போது பாதுகாக்கப்பட்டு பக்தர்கள் சுதந்திரமாக வழிபட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்புக்கும் செயற்பாட்டுக்கும் நாம் செய்ய வேண்டியது பெருமளவு உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தனி இராச்சியத்துக்குப் பலம் சேர்க்க முயல்வோர் விடயத்தில் படையினர் மட்டுமன்றி முழு நாட்டு மக்களும் தெளிவுடன் செயற்பட வேண்டியுள்ளதெனவும் வலியுறுத்தினார்.

“கெமுனு சேவா” படையணிக்கு வர்ணம் கையளிக்கும் வைபவம் நேற்று இரத்தினபுரி குருவிட்ட படை முகாமில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மனித உயிர்களைப் பாதுகாப்பதையே புத்த சாசனமும் மதமும் வலியுறுத்துகின்றன. நாட்டை ஒன்றிணைப்பதற்காக நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகளில் ஞாபகங்கள் பல ஆயிரமாண்டுகள் எமது மனங்களில் நிலைத்திருக்கும். எதிரி எம்மீது எத்தகைய குரோதங்களைக் கொண்டிருந்த போதும் எமது உயிர்களைப் பலிகொண்ட போதும் நாம் எதிரிகளையும் அந்த மக்களையும் குரோதமாக நோக்கவில்லை.

அத்தகைய கொள்கையொன்று எம்மிடம் இருந்தது. அன்று துட்டகைமுனு அரசர் எமக்குத் தந்த முன்னுதாரணம் அது. இயல்பாக படை வீரர்கள் யுத்தக் களத்தில் செயற்படுவது போலன்றி எமது படையினர் வித்தியாசமான முறையில் செயற்பட்டதை நாம் குறிப்பிட வேண்டும். ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் மனித உரிமைக் கொள்கையையும் அவர்கள் ஏந்தி செயற்பட்டனர். மனதில் மனித உரிமையைச் சுமந்து அதனை உணவுப் பொட்டலமாக வடக்கு மக்களுக்கு வழங்கினர்.

இந்த யோசனைகளின் பின்னணியில் இருப்பது என்னவென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனியான இராஜ்ஜியமே அதன் இலக்கு. நாட்டில் அனைவரும் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேறு நாடுகளில் ஈழம் உருவாக்கப்பட்டால் பரவாயில்லை. தமது நாட்டில் ஈழம் உருவாவதை எவரும் விரும்பவில்லை என்பதே இதன் மூலம் தெரியவருகிறது.  அதேபோன்று நாட்டின் மீது அன்பு செலுத்துபவர்கள் தமது நாட்டைப் பற்றி பிற நாடுகளில் விமர்சிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது. ஈழம் கோருபவர்கள் எம்மிடம் எதிர்பார்ப்பதை நாமே செய்து கொடுக்கக் கூடாது. படையினரைப் போலவே முழு நாட்டு மக்களும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.

2 comments:

  1. எந்தப் பள்ளிவாசல்?

    ReplyDelete
  2. ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கும் ஒரு சொல், ஈழம் என்ற சொல் தூய தமிழ்ச் சொல் அல்ல, அது பாளி மற்றும் சிங்கள மொழியிலிருந்து வந்த சொல்லாகும். சிங்களம், சிஹல, ஹெல , ஈழ என்ற சொற்களை அடியொட்டியே 'ஈழம்' என்ற சொல் பிறந்துள்ளது. வீரமாமுனிவர் 'ஈழம்' என்பதனை சிங்களவர்களின் தேசம் என்றே குறிப்பிட்டுள்ளார்.

    மேற்படி தகவல்கள், பேராசிரியர் நுஹ்மான் அவர்கள் BBC தமிழோசைக்கு வழங்கிய பேட்டியிலிருந்து பெறப்பட்டவை.

    ReplyDelete

Powered by Blogger.