Header Ads



அமைச்சர் அதாவுல்லா ஏற்பாட்டில் இலவச மூக்குக் கண்ணாடிகள் (படங்கள் இணைப்பு)

 
ஹப்றத்
 
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட கண்பார்வை குறைந்த குடும்பங்களுக்கு இலவச முக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட் சக்கி தலைமையில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் அழைப்பின் பெயரில் சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இவ்வைபவத்தில் அமைச்சின் அதிகாரிகள், மாநகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா உரையாற்றுகையில் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களினால் விNஷட வேலைத்திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட வருமானம் குறைந்த சமுர்த்தி நிவாரணம் பெறுகின்றவர்கள் அத்துடன் பொதுசன மாதாந்த உதவி பெறுகின்ற நாடளாவிய ரீதியில் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 1000 ரூபாவினை தேசிய சேமிப்பு வங்கிகளினூடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக எமது ஜனாதிபதி அவர்கள் சமுக சேவை அமைச்சிக்கு இவ்வருடத்துக்காக 911 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளார்.

எதிர்வரும் ஆண்டில் இத்தொகை அதிகரித்து வழங்கி மேலும் பல திட்டங்களை எமது மக்களுக்கு செய்ய ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தாh. இந்நிகழ்வில் 500க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
 


 

3 comments:

  1. தேர்தல் நெருங்குவதால் மூக்குக் கண்ணாடி மட்டுமல்ல, மூக்குப் பொடியும் கொடுப்பார்கள்!


    மூக்குக் கண்ணாடி மக்களின் பார்வையை தெளிவாக்க உதவும். அதே போல மக்களின் சிந்தனையும் தெளிவாகி விட்டால், அதாவுல்லாஹ் உட்பட பல அரசியல்வாதிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.


    ReplyDelete
  2. நான் படத்தைப் பார்த்தவுடன் சிந்தித்தேன் அமைச்சரின் சொந்த பணத்தில் வழங்குவதாக செய்தியைப் பார்த்தவுடன் தான் புரிந்து கொண்டேன். ”எவனோ ஒருத்தனனின் பணத்தில் வாப்பா பெயரில் கத்தம் ஓதிய கதையாக இருந்தது”. அதாவது, அத்துடன் ”கண்ணத் திண்டவன் கண்ணாடி வழங்கிய கதையும் இதற்குள் அடங்கும்”.


    ReplyDelete
  3. Not only Athaulla, your Hakeem too will disappear!

    ReplyDelete

Powered by Blogger.