பொது மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி சொல்லும் பொலிஸார்
தேடப்பட்டு வந்த வெள்ளவத்தை முக்கொலையாளி நேற்றுக்காலை கடவத் தையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தி யட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பிலிருந்து - குருணாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனி யார் பஸ்ஸொன்றில் பயனித்துக்கொண்டி ருந்த போதே கடவத்தை பொலிஸாரி னால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் மகனான 28 வயதுடைய பிரசாந்த் குமாரசாமி என்ற இச்சந்தேக நபரின் புகைப்படத்தை பிர சுரிக்குமாறு பொலிஸ் திணைக்களம் சகல ஊடகங்களையும் கேட்டுக்கொண்டி ருந்தது. இதன்படி கொலையாளியின் புகைப்படத்தை அச்சு மற்றும் இலத்திர னியல் ஊடகங்கள் பிரசுரித்திருந்தன.
கொழும்பிலிருந்து - குருணாகல் நோக்கி செல்லும் பஸ் வண்டியிலிருந்து ஒரு நபர் உடனடியாக சந்தேக நபர் தொடர்பான விபரங்களை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். கடவத்தை பொலிஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு பஸ் இடைமறிக்க ப்பட்டு கொலையாளி கைது செய்யப் பட்டுள்ளார்.
சந்தேக நபர் தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத் தப்பட்டுள்ளார். பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த புகைப்படத்தை பார்த்த பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபருக்கு பொலிஸ் திணைக்களம் தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளது.
மேலும் கொலையாளியின் புகைப் படத்தை பிரசுரித்துள்ள ஊடகங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான சந்தேக நபர்களை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த ஊடகங்களும், பொது மக்களும் உதவ வேண்டும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண டெரஸ் ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்திருந்தனர். ஹட்டன் கொட்டகலைப் பகுதியைச் சேர்ந்த தாயும் தந்தையும் மகளுமே கொல்லப்பட்டிருந்தனர். இவர்கள் சங்கிலி குமாரசாமி (56) அவரது மனைவி பூபவதி (54) மற்றும் அவர்களின் மகளான அனித பிரியா (25) என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
தலைமறைவாகியுள்ள இவர்களது மகனைத் தேடி வெள்ளவத்தை பொலிஸாரும், கொழும்பு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை பல்வேறு கோணங்களிலும் முடுக்கிவிட்டிருந்தனர். பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இவர்களது மகன் பிரசாந் பணிபுரிந்து வந்த இடம் அவரது நண்பர்கள் வாயிலாக கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்களை அடிப்படையாக வைத்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
கொட்டகலையில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் கொழும்புக்கு வந்து மருந்துப் பொருட்களின் விற்பனை பிரதிநிதியாகத் தொழில் புரிந்துள்ளார். அந்தஸ்துக்கு மீறிய விதத்தில் இரண்டு காதலிகளுடனும் வானங்களுடனும் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்த இவர் பணப்பிரச்சினை காரணமாக ஊருக்குச் சென்று தந்தையின் ஊழியர் நம்பிக்கை நிதியப்பணத்தைக் கேட்டுள்ளார்.
தந்தை அதனை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமுற்ற இவர் தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவரையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவின் படி மூவரையும் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார். தான் ஒரு மருந்துவப் பொருட்களின் விற்பனை முகவர் என்பதால் மிக எளிதாக மூவருக்கும் நஞ்சூட்டியுள்ளார். நஞ்சூட்டிய பின்னர் நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? என்ற எண்ணத்தில் தாயினதும் சகோதரியினதும் தங்கநகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
நேற்று சந்தேகநபரை விசாரணை செய்தபோதே இவ்விபரங்கள் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். கொழும்பிலிருந்து - குருணாகல் நோக்கிச் சென்ற பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டிருந்த வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவித்துள்ளார்.

துமிந்த சில்வா போன்ற அரசியல் பின்னணி மிக்க கொலைச் சந்தேக நபர்கள் விடயத்திலும் போலீசார் இதே போன்று செயல்படுவார்களா?
ReplyDeleteஅப்படி என்றால் ஹவலோக்ஸ் அணியின் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான பைலை மூடியது ஏன்?
இதை எல்லாம் கேட்ககூடாது இது ஒரு சிங்கள நாடு இஸ்டம் என்றால் இரு இல்லாவிட்டால் வெளியேறு இதுதான் பதில்
ReplyDeleteபாவம், ரெம்பத்தான் குழம்பிப் போய் இருக்கின்றீர்கள் போலும்.
ReplyDelete