77 பேரை கொன்றவனுக்கு 21 வருட சிறை
நார்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 77 பேரை சுட்டுக் கொன்ற அந்துர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள நார்வே நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்துள்ளது.
பிரெய்விக் மனநலம் சரியில்லாதவர் என்று நீதிமன்றம் தீர்பளிக்க வேண்டும் என்று அரச தரப்பு கோரியது. அந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால், உயர் பாதுகாப்பு கொண்டு மன நல சிறைப் பிரிவுக்கு அவர் அனுப்பப்பட்டிருப்பார்.
துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் தாக்குதலை நடத்தியதை ஆரம்பத்திலிருந்தே ஒப்புக்கொண்ட பிரெய்விக் அந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவிக்கவில்லை. தனது மன நலம் குறித்த தீர்ப்புக்கு எதிராக தான் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று அவர் முன்பு தெரிவித்திருந்தார்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்டோரின் உறவினர்களும், நண்பர்களும் தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.
குடியேரிகளுக்கு எதிராக பிரெய்விக் எழுதிய விடயங்கள் குறித்த கூடுதலான தகவல்கள் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன. bbc

NO death PENALTY unacceptable must death for death
ReplyDeleteஇதென்ன தீர்ப்பு? தீர்ப்பைக் கேட்டு, கொலையாளி அந்துர்ஸ் பிரேய்விக்கின் முகத்தில் லேசான புன்னகை தோன்றி மறைந்ததாம். BBC சொல்லிற்று.
ReplyDelete77 பேரை சுட்டுக் கொன்றதற்கு 21 வருட சிறைத் தண்டனை என்றால்,
ஒரு கொலைக்கு சற்றேறக் குறைய 100 நாள் சிறைத் தண்டனை, அவ்வளவுதான்.
நோர்வே சர்வதேச கொலையாளிகளை அன்புடன் வரவேற்கின்றது.
பொழுது போக்காக ஒன்றிரண்டு நோர்வே காரர்களை டப்பு டப்பு என்று சுட்டுக் கொன்றுவிட்டு, ஒரு 100 நாட்கள் நோர்வே அரசாங்கச் செலவில் ஜெயலில் ஜாலியாக ஓய்வெடுத்துவிட்டு சொந்த நாட்டுக்கு செல்லலாம்.
(யாராவது உங்களை, 'வா நோர்வேக்கு கூட்டிப் போகின்றேன்' என்று கூப்பிட்டால்........ போகப் போகின்றீர்களா?)
வானத்தின் இடியும் பூமியும் சுதியும் இவனுக்காய் காத்திருக்கின்றன நீதியாளன் நான் என்பதை இவன் விஷயத்தில் அல்லாஹ் கண்டிப்பாக வெகு விரைவில் காட்டுவான் உறுதியான ஆதரவுடன் பொறுதிருப்போம்
ReplyDeleteஇரண்டாவது கருத்தாளர் எல்லாவத்திட்கும் ஏதாவது எழுதிதான் ஆகவீண்டும் என்பது பர்ளு அல்ல மதில் புத்திசாலித்தனமான கருத்து வராவிட்டால் விளம்பரத்துக்காக அனைத்து செய்திகளுக்கும் கருத்தை குருரமாகவும் கேலியாகவும் எதிர்ப்பாகவும் பின்னர் சரணடைந்து நடுநிலையாகவும் எழுதி எங்களை குழப்பவேண்டாம்
ReplyDeleteஹீ ஹி ஹீ.....
ReplyDeleteஇதுக்கெல்லாம் கூடவா பொராமை படுவார்?
நல்லா கொமன்ட் பன்னினா பாத்து பாராட்டிட்டு போங்கோ.
உஙகலுக்கு முடியல்லேன்ன்டு பொராமை படாதேங்கோ.
அடப் பாவமே, ஒருவர் ரெம்பத்தான் குழம்பிப் போயுள்ளார்!
ReplyDelete