பௌத்த மதம் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் வருகிறது
பௌத்த மதம் தொடர்பிலான செய்திகள் மற்றும் ஆக்கங்களை பிரசுரிப்பது தொடர்பிலான சட்ட மூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பௌத்த மற்றும் இளைஞர் விவகார ஆணையாளர் சந்திரசேன கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.இதனை அனைத்து மஹாநாயக்க தேரர்களும் அங்கீகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பௌத்த மதத்தை போலியாக பிரசாரம் செய்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment