Header Ads



எகிப்தியர்கள் தக்காளியை வீணடித்து விட்டார்கள் - நக்கல் அடிக்கிறர் ஹிலாரி கிளிண்டன்


அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அண்மையில் எகிப்திற்கு சுற்றுப்பயணம் சென்ற வேளையில் அவர் மீது தக்காளிகளை வீசி எகிப்தின் உள்விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டிற்கு மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுக்குறித்து பதில் அளித்துள்ள ஹிலாரி, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள எகிப்தை சுட்டிக்காட்டும் விதமாக பட்டினியால் வாடும் ஏழைகள் தன் மீது தக்காளியை வீசியதாக நக்கலாக தெரிவித்தார்.

தன் மீது எகிப்தியர்கள் தக்காளி வீசியதைக் குறித்து சிரித்துக்கொண்டே அதேவேளையில் கிண்டலடிக்கும் விதமாக ஹிலாரி பதிலளித்தார். உணவை பாழாக்கிவிட்டார்களே என்பதுதான் தனது கவலை என அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.