ஹோர்மூஸ் கால்வாயை மூடுவதற்கு ஈரான் பாராளுமன்றம் அனுமதி
ஈரான் மீது ஐராப்பிய யூனியன் பொருளதார தடை விதித்தது.இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஹோர்மூஸ் கால்வாயினை மூடிவிட ,பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஈரான் அணு ஆயுதம் தயாரித்து வருவதாக எழந்த புகாரின் பேரில் அமரிக்கா, ஐரோப்பியன் யூனியன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
இந்நிலையில் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வெளியுறவு கொள்ளை கமிஷன் தலைவர் இப்ராஹிம் அகாஹ் முகம்மாதி, ஈரான் பாராளுமன்றமான மஜிலிசில் மசோதா ஒன்றை கொண்டுவந்தார். அதில் ஐரோ்ப்பிய யூனியன் நாடுகள் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி ,பொருளாதரா தடையும் விதித்துள்ளனர்.அதற்கு பதிலடியாக பாரசீக வளைகுடாவின் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்மூஸ் கால்வாயினை மூட வேணடும் என வலியுறுத்தினார்.
ஆசிய ,ஐரோப்பிய நாடுகள் தங்களது எண்ணெய் வர்த்தகம் கப்பல் வாயிலாக ஏற்றுமதியினை ஹோர்மூஸ் கால்வாய் வழியாக மேற்கொள்கி்ன்றன.இக்கால்வாயினை மூட ஈரான் சட்டம் கொண்டுவந்துள்ளது குறிப்பிடதக்கது

Post a Comment