வாமி ஏற்பாட்டில் சம்மாந்துறையில் இப்தார் (படங்கள்)
ஹப்றத்
உலக இஸ்லாமிய இளைஞர் பேரவையின்(வாமி) இலங்கைக் கிளையின் அனுசரனையுடன் சம்மாந்துறை செந்நெல்; ஸாஹிறா மகா வித்தியாலய அதிபர் ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நோம்பின் இலக்கு ஒரு திட்டமிடல் எனும் தலைப்பிலான மார்க்கச் சொற்பொழிவும்இ இப்தார் நிகழ்வும் இன்று(30) சம்மாந்துறை செந்நெல்; ஸாஹிறா மகா வித்தியாலய முன்றலில் அதிபர் எம்.ஏ.மீராமுகைதீன் தலைமையில் எம்.ஏ.எம்.றஷட் ஆசிரியரின் முழுமையான ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் உலக இஸ்லாமிய இளைஞர் பேரவையின்(வாமி) சம்மாந்துறைக் கிளையின் செயலாளர் மௌலவி கே.எம்.நியாஸ், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான எச்.எம்.பாறுக், எம்.எச்.எம்.பாறுக், கணக்காளர் றபீக், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.ஏ.றசூல் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள், உலமாக்கள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தில் மௌலவி சலாஹூதீன் அவர்களினால் மார்க்கச் சொற்பொழிவு நடாத்தப்பட்டது.



Post a Comment