விமானத் தகர்ப்பு சதி முறியடிக்கப்பட்டதாம் - அமெரிக்கா சொல்கிறது
நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தை விமானத்தின் மூலம் மோதி தகர்த்தனர். அதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதில் இருந்து அமெரிக்க விமானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2009-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது டெட்ராய்டு விமானத்தை ஜட்டி வெடிகுண்டு மூலம் தகர்க்க நடந்த சதியும், 2010-ம் ஆண்டில் அமெரிக்க சரக்கு விமானங்களை தகர்க்க நடந்த சதியும் முறியடிக்கப்பட்டன. கடந்த மே மாதம் நடந்த தற்கொலை தாக்குதல் சதியும் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அமெரிக்க விமானத்தை கடத்தி தகர்க்க அல்கொய்தாகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
இதற்காக நார்வேயைச் சேர்ந்த ஒருவரை அல்கொய்தாகள் தயார் செய்துள்ளனர். அவரை ஏமன் நாட்டுக்கு அனுப்பி பல மாதங்கள் தங்க வைத்து பயிற்சி அளித்துள்ளனர். அவர் மூலம் அமெரிக்க பயணிகள் ஜெட் விமானத்தை கடத்தி அதை குண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் வகுத்துள்ளனர்.
இந்த திட்டத்தை அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த தகவலை லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது. மாலை மலர்

Post a Comment