இப்படியும் ஒரு உமர் அலி..!
inneram
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த உமர் அலி ஓர் இரும்பு வியாபாரி. ஆலைகளிலிருந்து இரும்புப் பொருட்களை வாங்கி வணிகம் செய்து வரும் அவருடைய மனமோ மிகவும் இளகியது.
‘இருப்பவனுக்கோ இரும்புமனம்; இல்லாதவனுக்கோ இளகிய மனம் என்கிற தமிழ் சொலவடைக்குச் சான்றளிக்கும் விதமாக உமர் அலி நாள்தோறும் தன்னுடைய வயிற்றுக்கு உழைக்க வேண்டிய நிலையிலும் மிகுந்த பரோபகாரியாகத் திகழ்கிறார்.
22 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிற்று உமர் அலியின் சமூக சேவை. திருமூர்த்தி அணையில் மிதந்துகொண்டிருந்த உயிரற்ற மனித உடலைப் பார்த்தவர்கள் பரிதாபம் காட்டி நகர்ந்துவிட, உமர் அலியோ தளி காவல்நிலையத்தின் அனுமதி பெற்று அந்த உடலைப் பெற்று முறையாக அடக்கம் செய்தார்.
அன்று முதல் அநாதை உடல்களை அடக்கம் செய்யும் அவரின் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று வரை உடுமலை, அவினாசி, திருப்பூர், மங்கலம், மடத்துக்குளம், காங்கயம், ஆனைமலை, கோமங்கலம், நெகமம் என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 470 அநாதைப் பிணங்களை அடக்கம் செய்துள்ளார்.
மனித உடல்கள் மட்டுமின்றி, சாலையில் விபத்தில் சிக்கி மாண்டுப்போகும் விலங்கினங்களையும் அடக்கம் செய்திருக்கிறார். அவ்வகையில் சுமார் 130 விலங்குகளை அடக்கம் செய்திருக்கிறார் உமர் அலி.
‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதற்கேற்ப தனது நற்பணிகளை விளம்பரப்படுத்தாதவர் உமர் அலி. மனநலம் பாதிப்படைந்தவர்கள் வீதிகளில் சுற்றித்திரிந்தால் அவர்களை தனது செலவில் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதும், பின்னர் அவர்களை அநாதை ஆசிரமத்தில் சேர்ப்பதுமாக உமர் அலியின் நற்பணிக் கரங்கள் நீள்கின்றன.
கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டிச் சான்றிதழ் வழங்கியுள்ள உமர் அலீயின் மற்றொரு அமைதியான சாதனை மாணவர்களுக்கு எழுதுபொருள்கள் வாங்கிக் கொடுப்பது. இதுவரை, குடிமங்கலம், சுல்தான் பேட்டை, குண்டடம், மடத்துக்குளம், உடுமலைப் பகுதி யில் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான எழுது பொருட்களையும் அவர் வழங்கியுள்ளார்.
அநாதைப் பிணம் ஒன்றை அடக்கம் செய்வதற்கு ரூ.2000 வரை செலவாகிறதாம்., “அநாதையாகப் பிறந்தாலும், அநாதையாக யாரும் இறக்கக்கூடாது” என்பதைக் கொள்கையாகக் கொண்டு அளப்பரிய நற்காரியங்கள் ஆற்றிவருகிறார் உமர் அலீ.
இவ்வுலகில் அநாதை என்று யாருமில்லை என்று காரியங்களை ஆற்றிவருகிற உமர் அலீக்கு நம் வாழ்த்துகளையும் அளிப்போமாக!

அல்லாஹ் உமர் அலிக்கு பரகத் அளித்து நோய் இல்லாத வாழ்க்கையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டி துஆ செய்வோம்.
ReplyDeletemasha allah ippadiyum oru manidan
ReplyDelete