யுத்தத்தின் போது உயிர் நீத்த முப்படைகளைச் சேர்ந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு
ஆஸிக்
யுத்தத்தின் போது உயிர் நீத்த பொலீஸ் மற்றும் முப்படைகளைச் சேர்ந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு ஒன்று (2012 07 27 மாலை) கட்டுகஸ்தோட்டை அகில இலங்கை யுத்தவீரர்கள்; ஞாபகார்த்த நிலையத்தில் இடம் பெற்றது.
1992 ம் ஆண்டு யுத்த நடவடிக்கையின் போது உயிரிழந்த ஜெனரால் டென்சில் கொப்பேகடுவையின் பிறந்த நாளான இத்தினத்தில் வருடம் தோரும் இன் நிகழ்வு நடாத்தப்படுகின்றது.
20 வது வருடமாக நடாத்தப்பட்ட இன்நிகழ்வின் போது டென்சில் கொப்பேகடுவையின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மரியாதை தெரிவிக்கப்பட்டதுடன் இன்னும் பல்வேறு சமய விடயங்களும் இடம் பெற்றன.
இங்கு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட யுத்த வீரர்களது புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளனர். ஆத்துடன் நான்னு சமய ரீதியான நிகழ்வுகளும் வருடா வருடம் இடம் பெறுகின்றன.

Post a Comment