தந்தைக்கு மகனின் வேண்டுகோள்..!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இஸட் புள்ளிகளை (Z - Score) கணிப்பிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய வகையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இம்முறை இஸட் புள்ளிகள் கணிப்பிடும்போது பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற பெற்றோர்களின் பிள்ளைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பிரதேச வாழ் மாணவர்களுக்கு அதிகம் நன்மை கிடைத்துள்ளதாகவும், இஸட் புள்ளிகள் குறைவடைந்துள்ளமை காரணமாக உள ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் பரீட்சைகள் திணைக்களம் கூறுவது போன்று 5 நாட்களுக்குள் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்து 13 நாட்களுக்குள் மீண்டும் உயர்தரப் பரீட்சை எழுதும் மனநிலை இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத் தியுள்ளார்.
அநீதிக்கு உள்ளாகியுள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாது அவர்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே தாம் உள்ளிட்ட அனைவரதும் பொறுப்பாகுமென சுட்டிக்காட்டியுள்ள அவர் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நியாயம்கிடைக்கக் கூடிய வகையில் பொருத்தமான நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவரு ரொம்ப நல்லவரு போல......
ReplyDeleteநம்பிட்டோம்.
அப்பனுக்கே அறிவுரையா?
ReplyDelete