Header Ads



இவர் நல்லவராகத்தான் இருந்தாராம்..!


அமெரிக்க திரையரங்கில், பார்வையாளர்கள், 12 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி, கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் டென்வர் நகரில், அரோரா என்ற இடத்தில் உள்ள திரையரங்கில், வவ்வால் மனிதனின் கதையை அடிப்படையாகக் கொண்ட, "தி டார்க் நைட் ரைசஸ்' என்ற படத்தின் முன்னோட்டக் காட்சி, கடந்த 20ம் தேதி திரையிடப்பட்டது. திடீரென திரையரங்கத்தில் நுழைந்த ஜேம்ஸ் ஹோம்ஸ்,24, என்ற நபர், புகையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முகக் கவசத்தை அணிந்தபடி, பார்வையாளர்களை நோக்கி, இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இதில், 12 பேர் பலியாயினர். 58 பேர் காயமடைந்தனர். இவர் தங்கியிருந்த வீட்டில் வைத்திருந்த வெடிமருந்து பொருட்கள், செயலிழக்கச் செய்யப்பட்டன.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை, அதிபர் ஒபாமா சந்தித்து, ஆறுதல் கூறினார். கொலையாளி ஜேம்ஸ் ஹோம்ஸ், கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். கொலராடோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான ஜேம்ஸ், நன்றாக படிக்கக் கூடியவர். ஆனால், திடீரென கடந்த ஆண்டு, அவர் முனைவர் பட்டப் படிப்பை பாதியில் கைவிட்டதாகவும், தங்களுடன் பழகியவரை, நல்லவராகத் தான் இருந்தார் எனவும், அவருடன் படித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.