Header Ads



லெனின் விரும்பிய இஸ்லாம்...!

முஸ்லிம் முரசு

ஜார் இன கொடுங்கோல் ஆட்சி அஸ்தமனமான பின், ரஷ்யாவின் அதிபரானார் லெனின்; கம்யூனிச ஆட்சியை பிரகடனப்படுத்தினார். அப்போது தன்னுடைய நெருங்கிய சகாக்களின் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதிகள்.
 
நாம் நம்முடைய ஆட்சியை நிறுவுவதில் வெற்றி பெற்று விட்டோம். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமானால், மானிட இயலுக்கு ஒத்து வருகிற ஒரு வாழ்வியலைக் கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகிறது. மானிடத் தன்மைகள் பூர்த்தி அடைய, வெறும் ரொட்டி மட்டும் போதாது.

அவன் ஆத்மாவைத் திருப்திப்படுத்த, ஒரு மதமும் தேவைப்படுகிறது. நான் எல்லா மதங்களையும் மிக ஆழமாக அலசி ஆராய்ந்து பார்த்தேன். கம்யூனிச சித்தாந்தங்களுடன் ஒத்து வருகிற எந்த மதமும் என் கண்களுக்குப் படவில்லைஸ.. ஒரே ஒரு மார்க்கத்தைத் தவிர!
தற்சமயம் அந்த மார்க்கத்தின் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. இதைப் பற்றி நீங்கள் நன்கு சிந்திக்கவும், ஆலோசிக்கவும் உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். அவசரப்படாமல் ஆற, அமர நன்றாக சிந்தியுங்கள்!
 

இந்தக் கேள்வி, கம்யூனிசத்திற்கு வாழ்வா, சாவா என்ற கேள்வி. எந்த அளவு நேரம் வேண்டுமோ, அந்த அளவு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நான் கொண்டுள்ள கருத்து, தவறாக இருக்கலாம். ஆனாலும் நாம் நிதானமாக, பொறுமையாக யோசிக்க வேண்டும்.

கம்யூனிச கோட்பாட்டின் உலகவியல் கொள்கைக்கு ஒத்து வருகிற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே என நான் நினைக்கிறேன்ஸ என்றார் லெனின்.

லெனினின் இந்தப் பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பு. லெனின் குறுக்கிட்டு கூறினார். ஓராண்டு கழித்து, இதே இடத்தில் நாம் கூடுவோம். அதுவரை எந்த மதத்தை நாம் ஏற்றுக் கொள்வது என்பது பற்றி சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவோம்ஸ என்று கூட்டத்தை முடித்தார்.
 
பிரிட்டிஷ் அரசின், உளவு பிரிவுக்கு இந்த செய்தி எட்டியது. கம்யூனிச சக்திகளும், இஸ்லாமிய சக்திகளும் ஒன்றிணைந்தால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அதோ கதிதான் என அஞ்சியது.
 

இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த, ‘கடவுள் மறுப்புக் கொள்கையான மார்க்ஸ் கொள்கை இஸ்லாத்திற்கு ஏற்புடையது தானா?’ எனக் கேள்வி எழுப்பி, எகிப்தில் உள்ள, ‘அல் அஸ்ஹா’ பல்கலையில் பணியாற்றிய மார்க்கப் பெரியவர்களுக்கு சேதி அனுப்பி, விளக்கம் கேட்டது பிரிட்டிஷ் அரசு!

பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாத மார்க்கப் பெரியவர்கள், ‘கம்யூனிசமும், இஸ்லாமும் ஒரு போதும் இணைய முடியாதுஸ.’ என்ற, ‘பத்வாவை’ அந்த ஆலிம்கள் வழங்கினர். இதைத்தான் பிரிட்டிஷ் அரசு விரும்பியது.

உடனடியாக அந்த, ‘பத்வாவை’ லட்சக்கணக்கில் அச்சிட்டு, இஸ்லாமிய நாடுகளில் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தது பிரிட்டிஷ் அரசு.

இதை அறிந்த லெனின் அதிர்ச்சி அடைந்தார்; செய்வது அறியாமல் தவித்தார்!
 

1 comment:

  1. அடி நுனியில்லாமல் லெனின் பற்றிய வரலாற்றுச் சம்பவம் என்று ஒன்றை எழுதினால் எப்படி நம்புவது?

    மேற்படி உரையிலேயே முரண்பாடு காணப் படுகின்றதே?

    ''தற்சமயம் அந்த மார்க்கத்தின் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை.'' என்று சொன்ன லெனின், ''கம்யூனிச கோட்பாட்டின் உலகவியல் கொள்கைக்கு ஒத்து வருகிற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே என நான் நினைக்கிறேன்'' என்று அடுத்த
    நிமிடம் தனக்குத் தானே முரண்பட்டிருப்பாரா?


    மேற்படி செய்தியின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.