Header Ads



ஒரே குடும்பத்தில் 33 மருத்துவர்கள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வரிசையில், 33வது மருத்துவராக தேர்ச்சி பெற்று, குடும்பத்தினர் அனைவரும் மருத்துவ வாரிசுகள் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார் மாணவர் பிரசாத்.

ஆந்திராவில், விஜயவாடாவை சேர்ந்த புவ்வாடா ராமகிருஷ்ணா, உஷா லதா ஆகிய இருவரும், மருத்துவராக உள்ளனர். இவர்களின் மகன் பிரசாத், இந்த ஆண்டு நடந்த மருத்துவத் தேர்வில், மாநிலத்தில், 19வது இடத்தை பிடித்து, மருத்துவம் படிப்பதற்கு தேர்ச்சி பெற்றுள்ளார். இவரின் தாத்தா சூர்யநாராயணாவும், பாட்டி ஜான்சி லட்சுமியும் மருத்துவர்களே. பிரசாத்தின் அண்ணன் ரவிதேஜா, கடந்தாண்டு மருத்துவத் தேர்வில், 159வது இடத்தை பெற்று, மருத்துவம் படித்து வருகிறார். பிரசாத்தின் சித்தப்பாக்கள், அவர்களின் மனைவிகளும், மருத்துவம் படித்துள்ளனர். இவரின் தந்தை ராமகிருஷ்ணாவுடன் பிறந்த சகோதரிகளும், மருத்துவப் படிப்பு முடித்து, மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு, இதுவரை, 32 பேர் மருத்துவர் வரிசையில், இவருக்கு நெருங்கிய உறவினர்களாக உள்ளனர்.

இந்த மருத்துவ வாரிசு குடும்பத்தின் கவுரவத்தை, தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ளும் விதத்தில், இந்த கல்வி ஆண்டு மருத்துவத் தேர்வில் தேர்வாகி, குடும்ப வாரிசு அடிப்படையில், 33வது மருத்துவராக பிரசாத் இடம்பெற்றுள்ளார்.இதுகுறித்து பிரசாத் கூறும்போது, "இதய நிபுணராகி, ஏழைகளுக்கு மருத்துவ சேவை எளிதாக கிடைக்கச் செய்வதே, எனது வாழ்நாள் லட்சியம்' என்றார்.

No comments

Powered by Blogger.