அமெரிக்காவில் கடும் புயல் - 13 பேர் பலி, 30 இலட்சம் பேர் அவதி
அமெரிக்காவில் வீசிய, கடும் சூறாவளி புயலால், 13 பேர் பலியாகியுள்ளனர். மின்சாரம்
துண்டிக்கப்பட்டதால், 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் ஓஹியோ,
விர்ஜினியா, கொலம்பியா, மேரிலேண்ட் உள்ளிட்ட பகுதிகளை, சூறாவளி புயல் நேற்று
முன்தினம் தாக்கியது. இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். மின் கம்பங்கள் சாய்ந்து,
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், 30 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ரயில் பாதைகளில், மரங்கள் விழுந்து கிடப்பதால், ரயில் போக்குவரத்து
பாதிக்கப்பட்டுள்ளது. 20 மணி நேரம் ரயில்கள் தாமதமாக செல்வதால், ரயில்
நிலையங்களில், பயணிகள் காத்து கிடக்கின்றனர்.இல்லினாய்ஸ் பகுதியில், மனநலம்
பாதிக்கப்பட்ட கைதிகள், தங்க வைக்கப்பட்ட சிறைசாலை சேதம் அடைந்ததால், அவர்கள் வேறு
சிறைக்கு மாற்றப்பட்டனர். மேரிலேண்ட் பகுதியில், மொபைல் போன் கோபுரங்கள்
சாய்ந்ததால், மொபைல் போன் சேவையும், இன்டெர்நெட் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாததால், பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன.

Post a Comment