Header Ads



மடவளை முஸ்லிம்களின் முன்மாதிரி - வாருங்கள் கொப்பி அடிப்போம்...! (படங்கள்)

மடவளையில் வட்டி ஒழிப்பு மாதப் பிரகடனமும்,
வட்டியில்லா 'அழகிய கடன்' நிதியம் ஆரம்பமும்


மடவளையிலிருந்து மொஹமட் ஹபீஸ்

உலகலாவிய ரீதியில் பொருளாதாரம், நிதியியல்  உற்பட அனேக துறைகளில் இஸ்லாமிய மயமாதல் என்பது இன்று அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது என்று அகில இலங்கை 'ஜம்மியத்துல் உலமா' சபையின் இஸ்லாமிய வங்கிப்பிரிவின் செயலாளரும் பல்வேறு வங்கிகளில் இஸ்லாமிய நிதியியல் ஆலோசகராகவுமுள்ள  மௌலவி எம்.எச்.எம். யூசுப் முப்தி (பின்னூரி) தெரிவித்தார்.

(2.6.2012 இரவு) மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிலே இதனைத் தெரிவித்தார். அந்நூர் முதலீட்டு நிறுவனம் 'அழகிய கடன்கள்' என்ற பொது நிதியத்தை அங்குராப்பணம் செய்யும் முகமாக இவ்வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.  இவ்வைபவத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

சமுகத்தின் நன்மை நாடியே இவ்வாறான பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் சமுக நலனைப் பயன் படுத்தியவர்கள் சமுகத்தை மறந்து விடுகின்றனர் உதாரணத்திற்கு முஸ்லிம் சமூகத்தின் உதவி மூலம் கல்வி கற்ற முஸ்லிம் டாக்டர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக ஏதும் செய்கிறார்களா? ஏனக் கேட்டால் விடயம் வெளிச்சத்திற்கு வரும். ஒரு கிராமத்திலுள்ள முஸ்லிம் வைத்தியருக்கும் முஸ்லிம் அல்லாத வைத்தியருக்குமிடையே எது வித வித்தியாசத்தையும் காண முடியாது. இருவரது அணுகு முறையும் ஒன்றுதான். ஆப்படியாயின் அவர் சமுக உதவிகொண்டு கற்றதன் பயன் என்ன? அவரது அணுகு முறை ஏனைய மத்தவர்களது அணுகு முறையை விட வித்தியாசமாக இருக்கவேண்டும். வேறு படுத்திக் காட்டவேண்டும்.

அதே நேரம் சமுக உதவி கொண்டு கற்கும் மத்ரசா மாணவர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் பள்ளி வாயல்களில் ஊதியத்தை எதிர்பாராதவர்களாகக் கடமை புரிகின்றனர். ஆனால் சமூகம் அவர்களுக்கு வெகுமதிகளை வழங்குகிறது.

எது எப்படி இருப்பினும் உதவி தேவைப்படுவபவர்களுக்கு நிதியியல் ரீதியாக உதவிகள் செய்ய நம்பிக்கை நிதியங்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். அது எமது மூதாதையர்கள் காட்டிச் சென்ற வழி. முன்னோர்கள் ஆரம்பித்த நம்பிக்கை நிதியங்கள் மூலம் இன்றும் பயன் அடைகிறோம். ஆனால் புதிதாக நிதியங்களை அல்லது வருமானம் வரக் கூடிய உடமைகளை வக்பு செய்வோர் குறைந்து விட்டனர்.

இன்று 'வக்பு' என்ற விடயம் மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் மட்டுமே உள்ளது. அது பற்றி யாருக்கும் தெரியாது. இன்னிலை மாற்றப்படவேண்டும்.

உலகில் திறந்த பொருளாதாரம், முதலாளித்துவப் பொருளாதாரம் சமதர்மப் பொருளாதாரம், பொது உடமைப் பொருளாதாரம் எனப் பல் வகை உண்டு. ஆனால் இஸ்லாம் கூறும் பொருளாதாரம் அணைத்து வளங்களும் இறைவனுடையது. ஆதன் பிரதி நிதிகளாக மக்களைத் தெரிவு செய்து வசதி படைத்தோரையும் ஏழைகளையும் இறைவன் உருவாக்கியுள்ளான். இது நிரந்தரமற்றது. சிறிய இடைவெளியிலே மாறக்கூடியது. இதுவே இஸ்லாம் காட்டும் பொருளியல் கோட்பாடாகும் என்றார். எனவே நம்பிக்கை நிதியங்களை உருவாக்குவதன் மூலமே இதனை சமம் செய்யமுடியும்.

இஜ்லாமிய அடிப்படையில் வறுமையை ஒழிக்க முடியாது. ஆனால் காத்திரமான வறுமை இருக்கும். அதனை சீர் செய்ய சம்பிக்கை நிதியங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்நிதியங்களுக்கு பிரத்தியேக சட்டவிதிதகள் இஸ்லாத்தில் உண்டு என்றார்.

இவ்வைபவத்தில் உரையாற்றிய கண்டி மாவட்ட உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எச்.எம். புர்ஹான் (பஹ்ஜி) தெரிவித்ததாவது,

இஸ்லாமிய பார்வையில் பொருளாதாரம் என்பது பிரதி நிதித்துவக் கோட்பாட்டைக் கொண்டது. அதாவது வளங்கள் அனைத்தும் இறைவனுக்குறியது. ஆதனை பிரதிநிதிகளான எம்மிடத்தில் ஒப்படைத்துள்ளான். அதனை நாம் நெறி நீதி தவறாது மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றார்.

மேலும் வட்டி ஒழிப்பு மாதமாக இம்மாதத்தை மடவளை மக்கள் கடைப்படிக்க வேண்டுமெனப் பிரகடணப் படுத்தப்பட்டது.








1 comment:

  1. சமூக உதவியைக் கொண்டு மார்க்க கல்வி கற்பவர்கள் ஊதியத்தை எதிர்பாராமல் சேவை செய்கிறார்கள்,அவர்களுக்கு பொது மக்கள் வெகுமதி வழங்கி அவர்களை மதிப்பளிக்கிறார்கள்.மக்களின் கையை எதிர்பாற்பதினால் தான் மார்க்கத்தை தெளிவாக சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்கள் .மார்க்க அறிவுடன் கூடிய உலக கல்வியை போதித்தால்,அல்லாஹ்வுக்காக மட்டும் மார்க்கத்தை
    சொல்லக் கூடிய மனப்பக்குவம் வரும்.அந்த அந்த நேரங்களுக்கு பள்ளியில் தொழுவிப்பது,மற்றும் மார்க்க விடயங்களை போதிப்பது போன்றவைகளை செய்யலாம் என்பது என்போன்றவர்களின் அபிப்பிராயம்.அல்லாஹ் போதுமானவன் .
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.