பள்ளிசெல்லாத மாணவனுக்காக ஆசிரியரிடம் மன்னிப்புகேட்ட ஒபாமா..!
அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் நகரைச் சேர்ந்தவர் ரியன் கல்லிவன். இவரது மகன் டைலர் கல்லிவான் (11). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 5-வது வகுப்பு படிக்கிறான்.
இவனுக்கு அதிபர் ஒபாமாவை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்தது. இந்த நிலையில் அதிபர் ஒபாமா கோல்டன் வேலியில் உள்ள ஹனிவெல் என்ற இடத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். அதை அறிந்த சிறுவன் டைலர் அவரை பார்த்தே தீரவேண்டும் என தனது தந்தை ரியன் கல்லிவானை நச்சரித்தான். அவரும், அவனை ஒபாமாவின் கூட்டத்துக்கு அழைத்து சென்றார்.
அன்று சிறுவன் டைலர் பள்ளிக்கு செல்லவில்லை. இதற்கிடையே கூட்டத்தில் பங்கேற்ற டைலர் அதிபர் ஒபாமாவை நேரில் சந்தித்து பேசி மகிழ்ந்தான். அப்போது அவனிடம் ஏன் இன்று பள்ளிக்கு செல்லவில்லை என ஒபாமா கேட்டார். அதற்கு அவன் உங்களை பார்த்து பேசவேண்டும் என்ற ஆவலால் பள்ளிக்கு 'லீவு' போட்டதாக கூறினான்.
இதை தொடர்ந்து மறுநாள் டைலர் பள்ளிக்கு சென்றான். அதற்குள் வெள்ளை மாளிகையில் இருந்து டைலரின் வகுப்பு ஆசிரியர் அக்கர் மானுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது. அதில், 'சிறுவன் டைலர் என்னை பார்த்து பேச வேண்டும் என்ற ஆவலில் பள்ளிக்கு வரவில்லை. எனவே அவனுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்' என எழுதியிருந்தார்.
அதில் ஒபாமாவின் கையெழுத்தின் கீழ் அவரது வெள்ளை மாளிகை அலுவலகத்தின் முத்திரையும் இடப்பட்டிருந்தது. இது அந்த பள்ளி நிர்வாகத்துக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பள்ளி சென்ற டைலர் அதிபர் ஒபாமாவை தான் முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்ததாகவும், அவருடன் கை குலுக்கி பேசியதாகவும் பெருமையுடன் கூறினான். இதனால் அவன் அப்பள்ளியின் ஹீரோ ஆகி விட்டான்.

உலக முஸ்லீம்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டு, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடி ஹலிமா சொல்லி தாய் மதத்திற்கு திரும்பி வந்து விடுங்கள்.அல்லாஹ்விடத்தில் ஜனாதிபதி பதவியைவிட உயர்ந்த பதவி உங்களுக்காக காத்திருக்கிறது.
ReplyDeleteMeraan
I think there are some wrong information on this news which has been translated into Tamil. I read so many different article where there is no detail about the boy goes to school and the letter has been sent to the teacher from white house on Monday. Even on the video Obama hands the note over to the boy. So the news here is misleading. I am worrying about other serious news being translated wrong and create conflict between us. So make sure you proof read and get from credential source.
ReplyDelete