முஸ்லிம் இயக்கங்கள், அமைப்புகள் பற்றி விபரங்களைத் திரட்டும் இரகசிய நடவடிக்கை
எம்.ஏ.எம்.நிலாம்
முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் இயக்கங்கள், அமைப்புகள், தொண்டர் நிறுவனங்கள் பற்றிய விபரங்களைத் திரட்டும் ஒரு இரகசிய நடவடிக்கையை பாதுகாப்புத் தரப்பு முடுக்கி விட்டிருப்பதாக தெரியவருகிறது.
முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் இயக்கங்கள், அமைப்புகள், தொண்டர் நிறுவனங்கள் பற்றிய விபரங்களைத் திரட்டும் ஒரு இரகசிய நடவடிக்கையை பாதுகாப்புத் தரப்பு முடுக்கி விட்டிருப்பதாக தெரியவருகிறது.
கொழும்பில் இயங்கும் சிங்கள மொழியில் இஸ்லாம் கற்பிக்கும் ஒரு நிறுவனத்திடம் கடந்த வாரத்தில் விபரம் கேட்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் தர்ஹா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு தம்புள்ள பள்ளி வாசல் தாக்கப்பட்டதோடு அங்கிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற பௌத்த பிக்கு தலைமையில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அநுராதபுரம் தர்ஹா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு தம்புள்ள பள்ளி வாசல் தாக்கப்பட்டதோடு அங்கிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற பௌத்த பிக்கு தலைமையில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனையடுத்து குருணாகல் ஆரிய சிங்களவத்தை, தெகிவளை போன்ற இடங்களிலும் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸாக்களைத் தாக்க முற்பட்டனர்.
அது மட்டுமன்றி பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்கள் வாங்குவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையும் பரந்தளவில் முனனெடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் பின்னணியில் அரச பாதுகாப்புத் தரப்பு இருப்பதாக பலத்த சந்தேகம் உருவாகியுள்ள நிலையில் அண்மையில் முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்திடம் நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களின் விபரங்களை இரகசியப் பொலிஸ் பிரிவு கேட்டதாக ஒரு தகவல் வெளியானது. அதனை ஒருவாரம் கடந்த பின்னர் அவ்வாறான நடவடிக்கைகள் எதனையும் பாதுகாப்புத் தரப்பு எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்போது முஸ்லிம் அமைப்புகள், இயக்கங்கள், தொண்டர் நிறுவனங்களின் விபரங்களைத் திரட்டும் ஒரு முயற்சி சூட்சுசுமமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
சிங்கள மொழி மூலம் இஸ்லாம் கற்பிக்கும் நிறுவனத்திடம் சென்ற அதிகாரி தந்த நிறுவனத்தின் விபரங்களை மாத்திரமன்றி இலங்கை முஸ்லிம் கவுன்ஸில், முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பான முஸ்லிம் மீடியா போரம் உட்பட வேறு சில அமைப்புகள் பற்றியும் கேள்விகள் எழுப்பியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இவ்விடயம் தொடர்பாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கள மொழி மூலம் இஸ்லாம் கற்பிக்கும் நிறுவனத்திடம் இரண்டு அதிகாரிகள் சென்று அதன் செயற்பாடுகள் குறித்து விபரம் கேட்டறியப்பட்டதோடு நாட்டிலுள்ள ஏனைய முஸ்லிம் அமைப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைத் தொடரின் மற்றொரு அங்கமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. பெரும்பான்மை சமூகத்தின் பின்னணியிலிருந்துகொண்டு பாதுகாப்புத் தரப்பினரே இதில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜாமாத்துகளின் பெயர்களை சொல்லி நன்றாக அடிபட்டு கேவலப்படுங்கள்.இன,மத வெறியர்களின் வேலைகளை
ReplyDeleteஇலகுபடுத்தி உதவி செய்யுங்கள்.மியன்மாரிலும் பௌத்த வெறியாட்டம் தொடங்கி விட்டது.இலங்கையில் ஆரம்பிப்பதற்கு இன வெறி தேரர்கள் அடித்தளம் போடுகிறார்கள்.ஜமாத்துகாரன்களே,அடி விழும்போது ஜமாஅத் பார்த்து அடி விழாது.சோனி,காக்கா,மரக்கலையா என்றுதான் அடிவிழும்.எல்லா அமீர்களும் ஒன்று கூடி முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.நான் என்ற அகம்பாவத்தை விட்டு விட்டு முஸ்லீம்களாக ஒன்றுபடவேண்டிய வழி
முறைகளை தேடி இன்ஷா அல்லாஹ் ஜும்மாவுக்கு இதையே பிரசங்கமாக சொல்லுங்கள்.இயக்க வெறியுள்ளவர்களை ஒதுக்கி விட்டு நல்லவர்கள் முன்னே வந்து ஒரே ஜமாஅத், முஸ்லீம் உம்மா என்று ஒற்றுமைப்படுங்கள்.ஒரே ஜமாஅத் ஆனால் ஒரு கூட்டம் மார்க்க விடயத்திலும்,ஒரு கூட்டம் கல்வி,பொருளாதார மேம்பாடுகளிலும்,ஒரு கூட்டம் சமூக விடயங்களிலும்,ஒரு கூட்டம் பத்திரிக்கை,இணையம் போன்ற துறைகளிலும் , ஒரு கூட்டம் மார்க்க விரோத செயல்களில் ஈடுபடுவோரை
தடுப்பதிலும் ஒற்றுமையாக ஈடுபடலாமே.ஒற்றுமைப்படுவதைப் பார்க்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லைஎன்ற
நம்பிக்கையுடன் Meraan
ரமளானும் வருகின்றது.
ReplyDeleteஒளிந்துகொண்டிருக்கும் கிரீஸ் பூதமும் வெளி வரப்போகுது.
இரவு நேர தராவீஹை எப்படித் தொழுவோம்?