Header Ads



எகிப்தில் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்


எகிப்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து இன்று வெளியிட இருந்த தேர்தல் முடிவுகளை அதிகாரிகள் தாமதப்படுத்தியுள்ளனர்.

வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு மேலதிக காலஅவகாசம் தேவைப்படுவதாக எகிப்தின் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக அதில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் உரிமை கோரியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தேர்தல் முடிவுகள் தாமதப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைய்ரோவிலுள்ள தாரீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் உயர்மட்ட இராணுவப் பேரவையின் புதிய அதிகாரங்களுக்கும் ஆர்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 84 வயதான எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் ஹொஸ்னி முபாரக்கின் நிலைமை குறித்து எந்தவொரு அரச அதிகாரியும் கருத்துக்களை வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

No comments

Powered by Blogger.